Sriman Narayaneeyam - Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி (ச்லோகம் 967)
Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி
யாதார்த்யாத் த்வந்மயஸ்யைவ ஹி மம ந விபோ ! வஸ்துத: பந்த மோக்ஷௌ மாயா வித்யா தநுப்யாம் தவ து விரசிதௌ ஸ்வப்ந போதோபமௌ தௌ பத்தே ஜீவத்விமுக்திம் கதவதி ச பிதா தாவதீ தாவததேகோ புங்க்தே தேஹ த்ருமஸ்தோ விஷய பல ரஸாந்நாபரோ நிர்வ்யதாத்மா யாதார்த்யாத் த்வத் மயஸ்ய ஏவ ஹி மம ந விபோ ! வஸ்துத: பந்த மோக்ஷௌ மாயா வித்யா தநுப்யாம் தவ து விரசிதௌ ஸ்வப்ந போத உபமௌ தௌ பத்தே ஜீவத் விமுக்திம் கதவதி ச பிதா தாவதீ தாவத் ஏகோ புங்க்தே தேஹ த்ரும ஸ்த: விஷய பல ரஸாத் ந அபர: நிர்வ்யத ஆத்மா याथार्थ्यात्त्वन्मयस्यैव हि मम न विभो वस्तुतो बन्धमोक्षौ मायाविद्यातनुभ्यां तव तु विरचितौ स्वप्नबोधोपमौ तौ । बद्धे जीवद्विमुक्तिं गतवति च भिदा तावती तावदेको भुङ्क्ते देहद्रुमस्थो विषयफलरसान्नापरो निर्व्यथात्मा
குருவாயூரப்பா! உனது அம்சமாகவே திகழும் ஜீவாத்மாவில் ஒருவனான எனக்குப் பந்தம் அல்லது மோக்ஷம் என்பது கிடையாது. அவை உனது மாயையாலும் ஞானத்தாலும் உருவாக்கப்பட்டவை அன்றோ! அவை இரண்டும், கனவு நிலை மற்றும் விழிப்பு நிலை ஆகியவற்றுக்கு ஒப்பானவை ஆகும். இந்த உலகில் பற்றுடன் வாழும் மனிதனுக்கும், பற்றுகள் நீங்கி வாழும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடும் அதே அளவுதான் ஆகும். இந்த உடலானது மரம் போன்றது ஆகும். அதில் அமர்ந்து கொண்டு ஒருவன் (ஜீவாத்மா) இன்பதுன்பங்கள் என்னும் பழங்களை உண்கிறான். அதே மரத்தில் உள்ள மற்றொருவன் (பரமாத்மா), இவன் உண்பதைப் பார்த்துக் கொண்டு, தான் உண்ணாமல் உள்ளான் (இது சாந்தோக்ய உபநிஷத்தில் கூறப்படும் கருத்தாகும்).