Sriman Narayaneeyam - Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி (ச்லோகம் 966)
Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி
த்வல்லோகாதந்யலோக: க்வநு பய ரஹிதோ யத் பரார்த்த த்வயாந்தே த்வத் பீதஸ்ஸத்யலோகேSபி ந ஸுகவஸதி: பத்மபூ: பத்மநாப ! ஏவம் பாவே த்வதர்மார்ஜித பஹு தமஸாம் கா கதா நாரகாணாம் தந்மே த்வம் சிந்தி பந்தம் வரத ! க்ருபணபந்தோ ! க்ருபாபூரஸிந்தோ ! த்வத் லோகாத் அந்ய லோக: க்வ நு பய ரஹித: யத் பரார்த்த த்வய அந்தே த்வத் பீத: ஸத்ய லோகே அபி ந ஸுக வஸதி: பத்மபூ: பத்மநாப ! ஏவம் பாவே து அதர்ம ஆர்ஜித பஹு தமஸாம் கா கதா நாரகாணாம் தத் மே த்வம் சிந்தி பந்தம் வரத ! க்ருபணபந்தோ ! க்ருபா பூர ஸிந்தோ ! त्वल्लोकादन्यलोकः क्वनु भयरहितो यत् परार्धद्वयान्ते त्वद्भीतस्सत्यलोकेऽपि न सुखवसतिः पद्मभूः पद्मनाभ । एवम्भावे त्वधर्मार्जितबहुतमसां का कथा नारकाणां तन्मे त्वं छिन्धि बन्धं वरद कृपणबन्धो कृपापूरसिन्धो
பத்மநாபா! குருவாயூரப்பா! உனது ஸ்ரீவைகுண்டலோகம் தவிர நிலையான வாழ்விற்கு அச்சம் விளைவிக்காத இடம் வேறு எங்கு உள்ளது? தனது ஆயுட்காலமான இரண்டு கோடி ஆண்டு முடித்த நான்முகன், தனது ஸத்யலோகத்தில் பயம் இல்லாமல் வாழ இயலவில்லையே. (நான்முகவின் கதியே இப்படி என்றால்) தர்மம் அல்லாத வழிகளில், பாபங்கள் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு, நரகத்தில் விழுந்தவர்களின் நிலைமையைப் பற்றி நான் எப்படிக் கூறுவேன்? வரதனே! துயரம் அடைந்தவர்களுக்குப் புகலிடமே! கருணைக்கடலே! எனது பந்தம் அனைத்தையும் நீக்கி அருள்வாயாக!