Sriman Narayaneeyam - Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி (ச்லோகம் 965)

Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி

ஏவம் த்வத் ப்ராப்திதோSந்யோ நஹி கலு நிகில க்லேச ஹாநேருமாயோ நைகாந்த்யாத்யந்திகாஸ்தே க்ருஷிவத் அகத ஷாட்குண்ய ஷட்கர்ம யோகா: துர்வைகல்யைரகல்யா அபி நிகம பதாஸ்தத் பலாந்யப்யவாப்தா மத்தாஸ்த்வாம் விஸ்மரந்த: ப்ரஸஜதி பதநே யாந்த்யநந்தாந் விஷாதாந் ஏவம் த்வத் ப்ராப்தித: அந்ய: ந ஹி கலு நிகில கிலேச ஹாநே: உமாய: ந ஏகாந்த அத்யந்திகா: தே க்ருஷிவத் அகத ஷாட்குண்ய ஷட்கர்ம யோகா: துர்வைகல்யை: அகல்யா அபி நிகம பதா: தத் பலாநி அபி அவாப்தா மத்தா: த்வாம் விஸ்மரந்த: ப்ரஸஜதி பதநே யாந்தி அநந்தாந் விஷாதாந் एवं त्वत्प्राप्तितोऽन्यो नहि खलु निखिलक्लेशहानेरुपायो नैकान्तात्यन्तिकास्ते कृषिवदगदषाड्गुण्यषड्कर्मयोगाः । दुर्वैकल्यैरकल्या अपि निगमपथास्तत्फलान्यप्यवाप्ता मत्तास्त्वां विस्मरन्तः प्रसजति पतने यान्त्यनन्तान्विषादान्

குருவாயூரப்பா! இப்படியாக உலகில் உண்டாகும் பல்வேறு துன்பங்களை நீக்கிக் கொள்வதற்கு உன்னை அடைவதைத் தவிர வேறு வழி கிடையாது. ஆயுர்வேத வைத்திய முறையில் கூறப்பட்ட மருந்துகளும், நீதி நூல்களில் காணப்படும் ஆறுவிதமான நெறிமுறைகளும், தர்ம அறநெறி நூல்கள் கூறுகின்ற ஆறு செயல்களும் (ஆறு கர்மங்கள் = யஜநம், யாஜநம், அத்யயநம், அத்யாபனம், தானம், ப்ரதிக்ரஹம்), வேதங்கள் கூறுகின்ற எட்டுவகையான யோகங்களும் கூட துன்பங்களை வேரோடு அழிக்கவோ அல்லது மீண்டும் வராமல் தடுக்கவோ திறன் படைத்தவை அல்ல. அவையாவும் விவசாயம் எவ்வாறு கடினமான முயற்சிக்குப் பின் பலன் அளிக்கிறதோ, அது போன்றவை ஆகும். வேதங்களில் உள்ள (துயர் நீக்கும்) வழிகள், நமக்கு எளிதில் கிடைக்க இயலாத பொருள்கள் மற்றும் நீண்ட காலம் ஆகியவை காரணமாக செய்ய இயலாதவை ஆகும். அப்படியும் அந்த வேத வழிகளைப் பின்பற்றும் ஒரு சிலர், அதன் பயனாக ஸ்வர்க்கம் புகுந்தும், கர்வம் கொண்டும், உன்னையே மறந்து விடுகின்றனர். இதனால் ஸ்வர்க்க பலன் முடிந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது, மிகுந்த துன்பம் அடைகின்றனர்