Sriman Narayaneeyam - Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி (ச்லோகம் 964)
Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி
ஆசார்யாக்யாதரஸ்தாரணி ஸமநுமிலச்சிஷ்யரூபோத்தராரணி ஆவேதோத்பாஸிதேந ஸ்புடதர பரிபோதாக்நிநா தஹ்யமாநே கர்மாலீ வாஸநா தத் க்ருத தநு புவந ப்ராந்தி காந்தார பூரே தாஹ்யாபாவேந வித்யா சிகிநி ச விரதே த்வந்மயீ கல்வவஸ்தா ஆசார்ய ஆக்ய அதரஸ்த அரணி ஸமநுமிலத் சிஷ்ய ரூப உத்தர அரணி ஆவேத: உத்பாஸிதேந ஸ்புடதர பரிபோத அக்நிநா தஹ்யமாநே கர்மாலீ வாஸநா தத் க்ருத தநு புவந ப்ராந்தி காந்தார பூரே தாஹ்ய அபாவேந வித்யா சிகிநி ச விரதே த்வத் மயீ கலு அவஸ்தா आचार्याख्याधरस्थारणिसमनुमिळच्छिष्यरूपोत्तरार - ण्यावेधोद्भासितेन स्फुटतरपरिबोधाग्निना दह्यमाने । कर्मालीवासनातत्कृततनुभुवनभ्रान्तिकान्तारपूरे दाह्याभावेन विद्याशिखिनि च विरते त्वन्मयी खल्ववस्था
குருவாயூரப்பா! குருவின் உபதேசங்கள் அனைத்தும், கீழே உள்ள அரணிக்கட்டை (அக்னியை உண்டாக்கத் தேய்க்கப்படும் மரக்கட்டை) ஆகும். அந்த அரணிக்கட்டை மீது சிஷ்யன் என்னும் மேல் அரணிக்கட்டை உராயும்போது, ஞானம் என்ற அக்னி உண்டாகிறது. அந்த அக்னியானது “கர்மங்கள், கர்மங்கள் மீது உள்ள பற்றுதல், அவற்றின் விளைவாக உண்டாகும் உடல், உலகம்” ஆகிய காடுகளை அழிக்கிறது. எரித்து முடித்த பின்னர், எரிப்பதற்கு வேறு பொருட்கள் இல்லாத காரணத்தினால் அமைதியாகிறது. அப்போது உள்ள நிலையே உனது ஸ்வரூபம் அன்றோ?