Sriman Narayaneeyam - Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி (ச்லோகம் 963)

Dasaka 94 - தத்துவ ஞான உற்பத்தி

சுத்தா நிஷ்காம தர்மை: ப்ரவர குரு கிரா தத் ஸ்வரூபம் பரம் தே சுத்தம் தேஹேந்த்ரியாதி வ்யபகதம் அகில வ்யாப்தமாவேதயந்தே நாநாத்வ ஸ்தௌல்ய கார்ச்யாதி து குணஜ வபுஸ்ஸங்கதோSத்யாஸிதம் தே வஹ்நேர்தாரு ப்ரபேதேஷ்விவ மஹத் அணுதா தீப்ததா சாந்ததாதி சுத்தா நிஷ்காம தர்மை: ப்ரவர குரு கிரா தத் ஸ்வரூபம் பரம் தே சுத்தம் தேஹ இந்த்ரிய ஆதி வ்யபகதம் அகில வ்யாப்தம் ஆவேதயந்தே நாநாத்வ ஸ்தௌல்ய கார்ச்ய ஆதி து குணஜ வபு: ஸங்கத: அத்யாஸிதம் தே வஹ்நே: தாரு ப்ரபேதேஷு இவ மஹத் அணுதா தீப்ததா சாந்ததா ஆதி शुद्धा निष्कामधर्मैः प्रवरगुरुगिरा तत्स्वरूपं परं ते शुद्धं देहेन्द्रियादिव्यपगतमखिलव्याप्तमावेदयन्ते। नानात्वस्थौल्यकार्श्यादि तु गुणजवपुस्सङ्गतोऽध्यासितं ते वह्नेर्दारुप्रभेदेष्विव महदणुतादीप्तताशान्ततादि

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு சிறந்த குருவின் மூலமாக கர்மங்களை அறிந்தவர்களும், அவற்றை எந்தப் பலனையும் விரும்பாது செய்பவர்களும் உனது உருவத்தை எப்படி அறிகின்றனர்? உனது ஸ்வரூபம் என்பது உடல், புலன்கள் ஆகியவற்றைக் காட்டிலும் மாறுபட்டது; மிகவும் தூய்மையானது; எங்கும் நிறைந்துள்ளது; உயர்ந்த ப்ரஹ்மம் (ப்ரஹ்மம் என்பது நான்முகன் அல்லன்; ஸ்ரீமந்நாராயணன் ஆவான்) என்று உணர்கின்றனர். அக்னியானது பலவிதமான கட்டைகளில் எரியும்போது பெரியதாக, சிறியதாக, ப்ரகாசம் அதிகமாக, மெதுவாக எரிவதாக எனப் பலவாறு உள்ளது அல்லவா? இதே போன்று ப்ரஹ்மம் ஆகிய நீ, பெரியவனாகவும் சிறியவனாகவும் தோன்றுதல் என்பது, குணங்களுடைய விளைவால் உண்டாகும் சரீரத்துடன் தொடர்பு கற்பிக்கப்பட்ட காரணத்தால் ஆரோபிக்கப்பட்டதே ஆகும் (ஆரோபித்தல் என்றால், ஒன்றை மற்றொன்றின் மீது கற்பனையாக ஏறிட்டுக் கொள்ளுதல் ஆகும்; கயிற்றைப் பாம்பு எனக் கருத்துதல்).