Sriman Narayaneeyam - Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள் (ச்லோகம் 962)

Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள்

துர்வாரோ தேஹ மோஹோ யதி புநரதுநா தர்ஹி நிச்சேஷ ரோகாந் ஹ்ருத்வா பக்திம் த்ரடிஷ்டாம் குரு தவ பத பங்கேருஹே பங்கஜாக்ஷ நூநம் நாநா பவாந்தே ஸமதிகதமமும் முக்திதம் விப்ரதேஹம் க்ஷுத்ரே ஹா ஹந்த மா மா க்ஷிப விஷய ரஸே பாஹி மாம் மாருதேச துர்வார: தேஹ மோஹ: யதி புந: அதுநா தர்ஹி நிச்சேஷ ரோகாந் ஹ்ருத்வா பக்திம் த்ரடிஷ்டாம் குரு தவ பத பங்கேருஹே பங்கஜாக்ஷ நூநம் நாநா பவாந்தே ஸமதிகதம் அமும் முக்திதம் விப்ரதேஹம் க்ஷுத்ரே ஹா ஹந்த மா மா க்ஷிப விஷய ரஸே பாஹி மாம் மாருத ஈச दुर्वारो देहमोहो यदि पुनरधुना तर्हि निश्शेषरोगान् हृत्वा भक्तिं द्रढिष्ठां कुरु तव पदपङ्केरुहे पङ्कजाक्ष । नूनः नानाभवान्ते समधिगतमिमं मुक्तिदं विप्रदेहं क्षुद्रे हा हन्त मा मा क्षिप विषयरसे पाहि मां मारुतेश

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தாமரை போன்று அழகான கண்களைக் கொண்டவனே! இந்த உடலின் மீது கொண்ட ஆசையை நீக்க இயலவில்லை என்றால், நீ உடனே உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும், நீக்கி உனது தாமரை போன்ற திருவடிகளின் மீது ஆழ்ந்த பக்தியை உண்டாக்கவேண்டும். இந்த உயர்ந்த அந்தணப் பிறவியானது பல பிறவிகளுக்குப் பின்னர் அடையப்பட்டது. இது மோக்ஷம் பெற்றுத் தரவல்ல பிறவியாகும். ஆகவே இந்தப் பிறவியை அற்பமான சுகத்தில் ஈடுபடும்படியாக நீ தள்ளிவிடாதே! என்னைக் காப்பாற்றுவாயாக!***