Sriman Narayaneeyam - Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள் (ச்லோகம் 961)
Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள்
ஹீ ஹீ மே தேஹ மோஹம் த்யஜ பவநபுராதீச யத் ப்ரேம ஹேதோ: கேஹே வித்தே கலத்ராதிஷு ச விவிசிதா: த்வத் பதம் விஸ்மரந்தி ஸோSயம் வஹ்நேச்சுநோ வா பரமிஹ பரத: ஸாம்ப்ரதஞ்சாக்ஷி கர்ண த்வக் ஜிஹ்வாத்யா விகர்ஷந்த்யவசமத இத: கோSபி ந த்வத் பதாப்ஜே ஹீ ஹீ மே தேஹ மோஹம் த்யஜ பவநபுராதீச யத் ப்ரேம ஹேதோ: கேஹே வித்தே கலத்ர ஆதிஷு ச விவிசிதா: த்வத் பதம் விஸ்மரந்தி ஸ: அயம் வஹ்நே: சுந: வா பரம் இஹ பரத: ஸாம்ப்ரதம் ச அக்ஷி கர்ண த்வக் ஜிஹ்வா ஆத்யா விகர்ஷந் அவசம் அத இத: க: அபி ந த்வத் பத அப்ஜே ही ही मे देहमोहं त्यज पवनपुराधीश यत्प्रेमहेतोर्गेहे चित्ते कळत्रादिषु च विवशितास्त्वत्पदं विस्मरन्ति । सोऽयं वह्नेः शुनो वा परमिह परतः साम्प्रतञ्चाक्षिकर्ण - त्वग्जिह्वाद्या विकर्षन्त्यवशमत इतः कोऽपि न त्वत्पदाब्जे
குருவாயூரின் ஈசனே! எனது உடலின் மீது எனக்கு உள்ள மயக்கத்தை அகற்றுவாயாக. இந்த உடல் மீது உள்ள விருப்பத்தினால் அன்றோ மக்கள் தங்கள் வீட்டின் மீதும், செல்வத்தின் மீதும், மனைவி மற்றும் உறவினர்கள் மீதும் தங்கள் வசமிழக்கின்றனர்? அதனால் உனது திருவடிகளை மறந்தும் விடுகின்றனர். இந்த உடலானது உயிர் அகன்ற பின்னர், நெருப்பு அல்லது நாய்களுக்குச் சொந்தம் ஆகிறது அல்லவா? உயிருடன் உள்ளபோதும் கூட இந்த உடலைக் கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களும் தங்கள் வசப்படுத்தி இழுக்கின்றன. அவற்றில் ஒரு புலனாவது உனது திருவடிகளின் அருகில் உடலைக் கொண்டு செல்வதில்லையே! என்ன கஷ்டம்! என்ன கஷ்டம்!