Sriman Narayaneeyam - Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள் (ச்லோகம் 960)

Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள்

த்வய்யேவ த்வத்க்ருதம் த்வம் க்ஷபயஸி ஜகதித்யூர்ணநாபாத் ப்ரதீயாம் த்வத் சிந்தா த்வத் ஸ்வரூபம் குருத இதி த்ருடம் சிக்ஷயே பேசகாராத் விட் பஸ்மாத்மா ச தேஹோ பவதி குருவரோ யோ விவேகம் விரக்திம் தத்தே ஸஞ்சிந்த்யமாநோ மம து பஹு ருஜா பீடிதோSயம் விசேஷாத் த்வயி ஏவ த்வத் க்ருதம் த்வம் க்ஷபயஸி ஜகத் இதி ஊர்ணநாபாத் ப்ரதீயாம் த்வத் சிந்தா த்வத் ஸ்வரூபம் குருத இதி த்ருடம் சிக்ஷயே பேசகாராத் விட் பஸ்ம ஆத்மா ச தேஹ பவதி குருவர: ய: விவேகம் விரக்திம் தத்தே ஸஞ்சிந்த்யமாந: மம து பஹு ருஜா பீடித: அயம் விசேஷாத் त्वय्येव त्वत्कृतं त्वं क्षपयसि जगदित्यूर्णनाभात् प्रतीयां त्वच्चिन्ता त्वत्स्वरूपं कुरुत इति दृढं शिक्षेये पेशकारात् । विड्भस्मात्मा च देहि भवति गुरुवरो यो विवेकं विरक्तिं धत्ते सञ्चिन्त्यमानो मम तु बहुरुजापीडितोऽयं विशेषात्

குருவாயூரப்பா! நீ உருவாக்கிய உலகத்தை உன்னிடத்தில் ஒன்றி இருக்கும்படி செய்கிறாய் என்பதை, நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்ளும் சிலந்தி மூலமாக அறிகிறேன். உன்னையே எப்போதும் த்யானிக்கும் மனமானது, உனது ஸ்வரூபமாகவே மாறி விடுகிறது என்பதைக் குளவியின் மூலமாக அறிய வேண்டும் (புழுவைக் குளவி கொட்டிக் கொட்டி அந்தப் புழுவானது குளவியாக மாறுகிறது). இந்த உடல் ஒருநாள் மலம் போன்று இழிந்ததாகவோ அல்லது சாம்பலாகவோ மாறப்போகிறது. இந்த உடலே எனக்கு ஒரு குரு - எப்படி? உடலைப் பற்றிச் சிந்திக்கும்போது ஞானமும் பற்றின்மையும் ஏற்படுகிறது. குறிப்பாக எனது உடல் பல பிணிகளால் பீடிக்கப்பட்டிருந்த காரணத்தினால் அதிகமான ஞானத்தையும் பற்றின்மையையும் எனக்கு அளிக்கிறது.