Sriman Narayaneeyam - Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள் (ச்லோகம் 959)
Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள்
வர்த்தேய த்யக்தமாந: ஸுகமதி சிசுவந்நிஸ்ஸஹாயச்சரேயம் கந்யாயா ஏகசேஷோ வலய இவ விபோ வர்ஜிதாந்யோந்ய கோஷ: த்வத் சித்தோ நாவபுத்யை பரமிஷு க்ருதிவ க்ஷ்மாப்ருதாயாந கோஷம் கேஹேஷ்வந்ய ப்ரணீதேஷ்வஹிரிவ நிவஸாந்யுந்திரோர் மந்திரேஷு வர்த்தேய த்யக்தமாந: ஸுகம் அதி சிசு வத் நிஸ்ஸஹாய: சரேயம் கந்யாயா ஏக சேஷ: வலய இவ விபோ வர்ஜிதாநி அந்யயோந்ய கோஷ: த்வத் சித்த: ந அவபுத்யை பரம் இஷு க்ருத் இவ க்ஷ்மாப்ருத் ஆயாந கோஷம் கேஹேஷு அந்ய ப்ரணீதேஷு அஹி: இவ நிவஸாநி உந்திரோ: மந்திரேஷு वर्तेय त्यक्तमानः सुखमतिशिशुवन्निस्सहायश्चरेयं कन्याया एकशेषो वलय इव विभो वर्जितान्योन्यघोषः । त्वच्चित्तो नावबुध्यै परमिषुकृदिव क्ष्माभृदायानघोषं गेहेष्वन्यप्रणीतेष्वहिरिव निवसान्युन्दुरोर्मन्दिरेषु
குருவாயூரப்பா! ஒரு சிறிய குழந்தை எவ்விதம் பற்றுதல்கள் மற்றும் கர்வம் இல்லாமல் உள்ளதோ அது போன்று நானும் ஆனந்தமாக இருப்பேனாக. ஒரு வளையல் மட்டுமே அணிந்த பெண்ணின் கைகளில் எவ்விதம் ஓசை இல்லாமல் உள்ளதோ, அது போன்று நானும் தனிமையில், வீண் பேச்சுக்களைத் தவிர்த்து இருப்பேனாக. அம்புகளைத் தயாரிக்கும் ஒருவன், அரசன் வரும் ஊர்வல ஓசையைக் கேட்காமல், தனது செயலில் கண்ணாக இருப்பது போன்று, நான் உன்னிடம் மட்டுமே மனதை உடையவனாக, வேறு எதனையும் நினைக்காதவனாக இருப்பேனாக. எலிகளின் பொந்துகளில் பாம்பு வாழ்வது போன்று, (எனக்கென்று வீடு வைத்துக் கொள்ளாமல்) பிறர் வீடுகளில் வாழ்ந்து வருவேனாக.