Sriman Narayaneeyam - Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள் (ச்லோகம் 958)
Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள்
மா பத்யாஸம் தருண்யா கஜ இவ வசயா நார்ஜயேயம் தநௌகம் ஹர்த்தாந்யஸ்தம் ஹி மாத்வீஹர இவ ம்ருக வத் மா முஹம் க்ராம்ய கீதை: ந ஆதி ஆஸஜ்ஜேய போஜ்யே ஜஷ இவ பலிசே பிங்களாவந்நிராச: ஸுப்யாம் பர்தவ்ய யோகாத் குரர இவ விபோ ஸாமிஷோSந்யைர்ந ஹந்யை மா பத்யாஸம் தருண்யா கஜ இவ வசயா ந ஆர்ஜயேயம் தந ஓகம் ஹர்த்தா அந்ய: தம் ஹி மாத்வீஹர இவ ம்ருகவந் மா முஹம் க்ராம்ய கீதை: நா அத்யாஸஜஜேய போஜ்யே ஜஷ இவ பலிசே பிங்களாவத் நிராச: ஸுப்யாம் பர்தவ்ய யோகாத் குரர இவ விபோ ஸாமிஷ: அந்யை: ந ஹந்யை मा बध्यासं तरुण्या गज इव वशया नार्जयेयं धनौघं हर्तान्यस्तं हि माध्वीहर इव मृगवन्मा गुहं ग्राम्यगीतैः । नात्यासज्जेय भोज्ये झष इव बिडिशे पिङ्गलावन्निराशः सुप्यां भर्तव्ययोगात् कुरर इव विभो सामिषोऽन्यैर्न हन्यै
குருவாயூரப்பா! பெண் யானையைக் கண்டதும் ஆண் யானை தன்னையே இழந்து விடுவது போன்று, நான் பெண்ணாசையில் கட்டுப்படாமல் இருக்கவேண்டும். தேனீ எவ்விதம் தனது செல்வமான தேனைச் சேர்த்து வைத்துக் கொள்கிறதோ, அது போன்று நான் பொருளைச் சேமித்து வைக்காமல் இருக்கவேண்டும்; காரணம், அந்தப் பொருளை மற்றவர் எளிதில் கவர்ந்து விட இயலும். இசையில் மயங்கும் விலங்குகள் போன்று நான், பகவத் தொடர்பு இல்லாத இசையில் மயங்கக்கூடாது. உணவின் மீது உள்ள ஆசையால் மீன் தூண்டிலில் சிக்குவது போன்று, நான் உணவின் ருசியில் அதிக விருப்பம் கொள்ளக்கூடாது. பிங்களை என்ற வேசியைப் போன்று நான் பற்றுதல் இன்றி உறங்க வேண்டும் (அவள் ஒருநாள் திடீரென ஞானம் பெற்று, த்யானம் கைகூடி பற்றுதல்களை விட்டாள்). குரரம் என்ற பறவை மாமிஸத் துண்டைக் காப்பாற்ற பெருமுயற்சி எடுப்பது போன்று, நான் பொருளைச் சேர்த்து காப்பாற்றும் துன்பம் அடையாமல் இருப்பேனாக.