Sriman Narayaneeyam - Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள் (ச்லோகம் 957)

Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள்

ஸ்நேஹாத் வ்யாதாத்த புத்ர ப்ரணய ம்ருத கபோதாயிதோ மா ஸ்ம பூவம் ப்ராப்தம் ப்ராச்நந் ஸஹேய க்ஷுதமபி சயுவத் ஸிந்துவத் ஸ்யாமகாத: மா பப்தம் யோஷிதாதௌ சிகிநி சலபவத் ப்ருங்கவத் ஸாரபாகீ பூயாஸம் கிந்து தத்வத் தந சயந வசாந் மாஹமீச ப்ரேணசம் ஸ்நேஹாத் வ்யாத அஸ்த புத்ர ப்ரணய ம்ருத கபோத ஆயித: மா ஸ்ம பூவம் ப்ராப்தம் ப்ராச்நந் ஸஹேய க்ஷுதம் அபி சயு வத் ஸிந்து வத் ஸ்யாம் அகாத: மா பப்தம் யோஷித் ஆதௌ சிகிநி சலப வத் ப்ருங்க வத் ஸார பாகீ பூயாஸம் கிந்து தத் வத் தந சயந வசாத் மா அஹம் ஈச ப்ரேணசம் स्नेहाद्व्याधास्तपुत्रप्रणयमृतकपोतायितो मा स्म भूवं प्राप्त प्राश्नन् सहेय क्षुधमपि शयुवत्सिन्धुवत्स्यामगाधः । मा पप्तं योषिदादौ शिखिनि शलभवद् भृङ्गवत्सारभागी भूयासं किन्तु तद्वद्धनचयनवशान्माहमीश प्रणेशम्

குருவாயூரப்பா! ஈசனே! வேடன் ஒருவன், ஒரு புறாவின் குஞ்சைக் கொன்றான். இதனால் புத்திரசோகம் தாங்காமல் தாய்ப்புறாவானது தனது உயிரை விட்டது. அதனைப் போன்று நான் இருக்கக்கூடாது (பாசத்திற்கு அடிமை ஆகக்கூடாது). மலைப்பாம்பு போன்று தானாகவே வலியக் கிடைக்கும் உணவை உண்டு எனது பசியைப் போக்குவேனாக. கடலைப் போன்று ஆழமாகவும், கம்பீரமாகவும் இருப்பேனாக. வெட்டுக்கிளி தானாகவே சென்று தீயில் விழுவது போல், பெண்களின் சுகத்திற்காக நான் விழாமல் இருப்பேனாக. தேனீ எவ்விதம் மலர்களில் உள்ள தேனை மட்டும் எடுக்கிறதோ அது போன்று நானும் பொருள்களின் ஸாரத்தை உணரவேண்டும். ஆயினும் தேனீ சேர்த்து வைக்கும் பொருள் போன்று (தேன்) நான் பொருளைச் சேர்த்து வைத்து அழியக்கூடாது, ஈசனே!