Sriman Narayaneeyam - Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள் (ச்லோகம் 956)

Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள்

ஸ்வச்ச: ஸ்யாம் பாவநோSஹம் மதுர உதகவத் வஹ்நிவந் மா ஸ்ம க்ருஹ்ணாம் ஸர்வாந்நீநோSபி தோஷம் தருஷு தமிவ மாம் ஸர்வ பூதேஷ்வவேயாம் புஷ்டிர்நஷ்டி: கலாநாம் சசிந: இவ தநோ: நாத்மநோSஸ்தீதி வித்யாம் தோயாதி வ்யஸ்த மார்தாண்டவதபி ச தநுஷ்வேகதாம் த்வத் ப்ரஸாதாத் ஸ்வச்ச: ஸ்யாம் பாவந: அஹம் மதுர உதக வத் வஹ்நி வத் மா ஸ்ம க்ருஹ்ணாம் ஸர்வ அந்நீந: அபி தோஷம் தருஷு தம் இவ மாம் ஸர்வ பூதேஷு அவேயாம் புஷ்டி: நஷ்டி: கலாநாம் சசிந: இவ தநோ: ந ஆத்மந: அஸ்தி இதி வித்யாம் தோய ஆதி வ்யஸ்த மார்தாண்ட வத் அபி ச தநுஷு ஏகதாம் த்வத் ப்ரஸாதாத் स्वच्छः स्यां पावनोऽहं मधुर उदकवद्वह्निवन्मा स्म गृह्णां सर्वान्नीनोऽपि दोषं तरुषु तमिव मां सर्वभूतेष्ववेयाम् । पुष्टिर्नष्टिः कलानां शशिन इव तनोर्नात्मनोऽस्तीति विद्यां तोयादिव्यस्तमार्ताण्डवदपि च तनुष्वेकतां त्वत्प्रसादात्

குருவாயூரப்பா! நான் தண்ணீரைப் போன்று தெளிவாகவும், தூய்மையாகவும், (அனைவருக்கும்) இனிமையாகவும் இருக்கவேண்டும். அக்னியைப் போன்று அனைத்தும் உண்பவனாகவும், அவ்விதம் உண்பதால் பாபம் அற்றவனாகவும் மாறவேண்டும். மரத்தில் அக்னியானது எவ்விதம் மறைவாக உள்ளதோ அதனைப் போன்று எனது ஆத்மா மறைவாகப் பல உடல்களிலும் உள்ளது என்ற ஞானம் பெறுவேன். தேய்வதும் வளர்வதும் சந்திரனின் பிறைகளுக்கு மட்டும் உண்டாவது போன்று, எழுச்சியும் வீழ்ச்சியும் இந்த உடலுக்கு மட்டுமே, ஆத்மாவிற்கு அல்ல என்பதை உணர்வேன். சூரியன் ஒன்று என்றாலும் வெவ்வேறு தண்ணீரில் பலவாகத் தோன்றுவது போன்று, பல சரீரங்களில் இருந்தாலும் ஆத்மா ஒன்று என நான் உணரவேண்டும். இவை அனைத்தும் உனது கடாக்ஷத்தால் எனக்குக் கிட்டும்.