Sriman Narayaneeyam - Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள் (ச்லோகம் 955)
Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள்
த்வத் காருண்யே ப்ரவ்ருத்தே க இவ நஹி குருர்லோக வ்ருத்தேSபி பூமந் ஸர்வாக்ராந்தாபி பூமிர்நஹி சலதி ததஸ்ஸத்க்ஷமாம் சிக்ஷயேயம் க்ருஹ்ணீயாமீச தத்தத் விஷய பரிசயே அப்யப்ரஸக்திம் ஸமீராத் வ்யாப்தத்வஞ்சாத்மநோ மே ககந குரு வசாத்பாது நிர்லேபதா ச த்வத் காருண்யே ப்ரவ்ருத்தே க இவ ந ஹி குரு: லோக வ்ருத்தே அபி பூமந் ஸர்வாக்ராந்தா அபி பூமி: ந ஹி சலதி தத: ஸத் க்ஷமாம் சிக்ஷயேயம் க்ருஹ்ணீயாம் ஈச தத் தத் விஷய பரிசயே அபி அப்ரஸக்திம் ஸமீராத் வ்யாப்தத்வம் ச ஆத்மந: மே ககந குரு வசாத் பாது நிர்லேபதா ச त्वत्कारुण्ये प्रवृत्ते क इव न हि गुरुर्लोकवृत्तेऽपि भूमन् सर्वाक्रान्तापि भूमिर्न हि चलति ततः सत्क्षमां शिक्षयेयम् । गृह्णीयामीश तत्तद्विषयपरिचतेऽप्यप्रसक्तिं समीरा - द्व्याप्तत्वञ्चात्मनो मे गगनगुरुवशाद्भातु निर्लेपता च
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது அருள் இருந்துவிட்டால் இந்த உலகில் உள்ளவற்றில் எந்தப் பொருள்தான் குருவாக இருக்க முடியாது? உலகில் உள்ளவை அனைத்தையும் தாங்கி நிற்கும் பூமியானது அசையாமல் உள்ளது; இந்தப் பூமி மூலமாக நான் பொறுமை என்பதை அறிகிறேன். காற்று வீசும்போது அனைத்து பொருட்களின் மீதும் தொடர்பு ஏற்பட்டாலும், ஒட்டுதல் என்பது இல்லை; இதன் மூலம் பற்று என்பது இல்லாத தன்மையை அறிகிறேன். ஜீவாத்மா பற்றுதல் இல்லாமல் எங்கும் நிறைந்துள்ளது என்பதை ஆகாசம் என்ற குரு மூலம் உணர்கிறேன்.