Sriman Narayaneeyam - Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள் (ச்லோகம் 954)

Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள்

க்ஷுத் த்ருஷ்ணா லோபமாத்ரே ஸதத க்ருத தியோ ஜந்தவ: ஸந்த்யநந்தா: தேப்யோ விஜ்ஞானவத்வாத் புருஷ இஹ வரஸ்தத் ஜநிர்துர்லபைவ தத்ராப்யாத்மாத்மந: ஸ்யாத் ஸுஹ்ருதபி ச ரிபுர்யஸ்த்வயி ந்யஸ்த சேதா: தாபோச்சித்தேருபாயம் ஸ்மரதி ஸ ஹி ஸுஹ்ருத் ஸ்வாத்ம வைரீ ததோSந்ய: க்ஷுத் த்ருஷ்ணா லோப மாத்ரே ஸதத க்ருத திய: ஜந்தவ: ஸந்தி அநந்தா: தேப்ய: விஜ்ஞானவத்வாத் புருஷ இஹ வர: தத் ஜநி: துர்லப ஏவ தத்ர அபி ஆத்மா ஆத்மந: ஸ்யாத் ஸுஹ்ருத் அபி ச ரிபு: யஸ்த்வயி ந்யஸ்த சேதா: தாப உச்சித்தே: உபாயம் ஸ்மரதி ஸ ஹி ஸுஹ்ருத் ஸ்வாத்ம வைரீ தத: அந்ய: क्षुत्तृष्णालोपमात्रे सततकृतधियो जन्तवस्सन्त्यनन्ता - स्तेभ्यो विज्ञानवत्त्वात् पुरुष इह वरस्तज्जनिर्दुर्लभैव । तत्राप्यात्मात्मनः स्यात् सुहृदपि च रिपुर्यस्त्वयि न्यस्तचेता - स्तापोच्छित्तेरुपायं स्मरति स हि सुहृत् स्वात्मवैरी ततोऽन्यः

குருவாயூரப்பா! இந்த உலகில் தங்களது பசி மற்றும் தாகம் ஆகியவற்றைத் தீர்த்துக் கொள்வதில் மட்டுமே மனதை உடைய விலங்குகள் பல உள்ளன. ஆனால் ஆராய்ந்து பார்க்கின்ற அறிவுள்ளதால், மனிதன் அவற்றை விட மேலானவனாக உள்ளான். இப்படிப்பட்ட மனிதப்பிறவி கிடைப்பது என்பது மிகவும் அரியது ஆகும். மனிதன் என்பவன் தனக்குத்தானே நண்பனாகவும் எதிரியாகவும் உள்ளான். உன்னிடம் தனது மனதை அர்ப்பணம் செய்தவனாக, அதன் மூலம் தனது துன்பங்களை நீக்கும் வழியை ஆராய்பவன் தனக்குத்தானே நண்பனாக உள்ளான். இப்படி இல்லாதவன் தனக்குத் தானே எதிரி அல்லவா?