Sriman Narayaneeyam - Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள் (ச்லோகம் 953)
Dasaka 93 - இருபத்து நான்கு குருக்கள்
பந்து ஸ்நேஹம் விஜஹ்யாம் தவ ஹி கருணயா த்வய்யுபாவேசிதாத்மா ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலமபி ஜகத் வீக்ஷ்ய மாயா விலாஸம் நாநாத்வாத் ப்ராந்தி ஜந்யாத் ஸதி கலு குண தோஷாவபோதே விதிர்வா வ்யாஸேதோ வா கதம் தௌ த்வயி நிஹித மதேர் வீத வைஷம்ய புத்தே: பந்து ஸ்நேஹம் விஜஹ்யாம் தவ ஹி கருணயா த்வயி உபாவேசித ஆத்மா ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலம் அபி ஜகத் வீக்ஷ்ய மாயா விலாஸம் நாநாத்வாத் ப்ராந்தி ஜந்யாத் ஸதி கலு குண தோஷ அவபோதே விதி: வா வ்யாஸேத: வா கதம் தௌ த்வயி நிஹித மதே: வீத வைஷம்ய புத்தே: बन्धुस्नेहं विजह्यां तव हि करुणया त्वय्युपावेशितात्मा सर्वं त्वक्त्वा चरेयं सकलमपि जगद्वीक्ष्य मायाविलासम् । नानात्वाद्भ्रान्तिजन्यात्सति खलु गुणदोषावबोधे विधिर्वा व्यासेधो वा कथं तौ त्वयि निहितमतेर्वीतवैषम्यबुद्धेः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது அளவு கடந்த கருணை மூலமாக நான் எனது உறவினர்கள் மீது வைத்துள்ள பாசத்தை துறந்து விடுவேனாக! உன்னிடம் மட்டுமே எனது மனதை முழுமையாகச் செலுத்தியவனாக, இந்த உலகம் முழுவதுமே உனது விளையாட்டு என்று அறிந்தவனாக, அனைத்தையும் விலக்கி வாழ்பவனாக சுதந்திரமாக எங்கும் நான் செல்வேன். நல்லது மற்றும் கெட்டது எனப் பிரித்து அறியும் ஞானம் உள்ளவருக்கு மட்டுமே பிடிப்பும் விலக்கும் உண்டாகின்றது. உன்னிடம் தனது மனதை முழுமையாக அர்ப்பணித்த மனிதன், தீய அறிவு என்பதே இல்லாதவனாக மாறுகிறான். பின்னர் பிடிப்பும் விலக்கும் எப்படி உண்டாகும்?