Sriman Narayaneeyam - Dasaka 92 - கர்மங்களும் பக்தியும் (ச்லோகம் 951)

Dasaka 92 - கர்மங்களும் பக்தியும்

கங்கா கீதா ச காயத்ரயபி ச துளஸிகா கோபிகாசந்தனம் தத் ஸாளக்ராமாபிபூஜா பரபுருஷ ததைகாதசீ நாமவர்ணா: ஏதாந்யஷ்டாப்யயத்நாந்யயி கலி ஸமயே த்வத் ப்ரஸாத ப்ரவ்ருத்தயா க்ஷிப்ரம் முக்தி ப்ரதாநீத்யபிதது: ருஷயஸ்தேஷு மாம் ஸஜ்ஜயேதா: கங்கா கீதா ச காயத்ரீ அபி ச துளஸிகா கோபிகாசந்தனம் தத் ஸாளக்ராம அபிபூஜா பரபுருஷ ததா ஏகாதசீ நாமவர்ணா: ஏதாநி அஷ்ட அபி அயத்நாநி அயி கலி ஸமயே த்வத் ப்ரஸாத ப்ரவ்ருத்தயா க்ஷிப்ரம் முக்தி ப்ரதாநீ இதி அபிதது: ருஷய: தேஷு மாம் ஸஜ்ஜயேதா: गङ्गा गीता च गायत्र्यपि च तुळसिका गोपिकाचन्दनं तत् साळग्रामाभिपूजा परपुरुष तथैकादशी नामवर्णाः । एतान्यष्टाप्ययत्नान्ययि कलिसमये त्वत्प्रसादप्रवृद्ध्या क्षिप्रं मुक्तिप्रदानीत्यभिदधुरृषयस्तेषु मां सज्जयेथाः

குருவாயூரப்பா! பரமபுருஷா! இந்தக் கலிகாலத்தில் பெரும் முயற்சி இல்லாமலேயே உனது அருளைப் பெற்றுத் தந்து, மோக்ஷமும் அளிப்பவை என எட்டு அம்சங்களை முனிவர்கள் கூறுகின்றனர். அவையாவன - கங்கை, ஸ்ரீமத்பகவத்கீதை, காயத்ரி மந்திரம், துளஸி, கோபிசந்தனம், சாளக்கிராம ஆராதனை, ஏகாதசி விரதம், நாம ஸங்கீர்த்தனம் என்பவை ஆகும். எனக்கு இவற்றின் மீது ஈடுபாட்டை அளிப்பாயாக!