Sriman Narayaneeyam - Dasaka 92 - கர்மங்களும் பக்தியும் (ச்லோகம் 950)

Dasaka 92 - கர்மங்களும் பக்தியும்

த்ருஷ்ட்வா தர்மத்ருஹம் தம் கலிம் அபகருணம் ப்ராங்மஹீக்ஷித் பரீக்ஷித் ஹந்தும் வ்யாக்ருஷ்ட கட்கோSபி ந விநிஹிதவாந் ஸாரவேதீ குணாம்சாத் த்வத் ஸேவாத்யாசு ஸித்தயேதஸதிஹ ந ததா த்வத்பரே சைஷ பீரு: யத் து ப்ராகேவ ரோகாதிபி: அபஹரதே தத்ர ஹா சிக்ஷ்யைநம் த்ருஷ்ட்வா தர்மத்ருஹம் தம் கலிம் அபகருணம் ப்ராக் மஹீக்ஷித் பரீக்ஷித் ஹந்தும் வ்யாக்ருஷ்ட கட்க: அபி ந விநிஹிதவாந் ஸாரவேதீ குண அம்சாத் த்வத் ஸேவா ஆதி ஆசு ஸித்தயேத் அஸத் இஹ ந ததா த்வத் பரே ச ஏஷ பீரு: யத் து ப்ராக் ஏவ ரோக ஆதிபி: அபஹரதே தத்ர ஹா சிக்ஷ்ய ஏநம் दृष्ट्वा धर्मद्रुहं तं कलिमपकरुणं प्राङ्महीक्षित् परीक्षिद्धन्तुं व्याकृष्टखड्गोऽपि न विनिहतवान् सारवेदी गुणांशात् । त्वत्सेवाद्याशु सिध्येदसदिह न तथा त्वत्परे चैष भीरुर्यत्तु प्रागेव रोगादिभिरपहरते तत्र हा शिक्षयैनम्

குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில் கலிபுருஷன், தர்ம தேவதையை மிகவும் கொடுமைப்படுத்துவதை பரீக்ஷித் என்ற அரசன் கண்டான். அவன் உடனே தனது வாளை உருவி கலிபுருஷனைக் கொல்ல முயன்றான். ஆனால் அந்த கலிபுருஷனின் நல்ல குணங்களைக் கண்ட அரசன் அவனைக் கொல்லாமல் விட்டான். இந்தக் கலியுகத்தில் உனது ஆராதனையும், தரிசனமும் கூடிய விரைவில் பலன் அளிக்கிறது. அதே நேரம் பாபங்கள் விரைவாக தீய பலனை அளிப்பதில்லை. கலிபுருஷன் உனது பக்தர்களைக் கண்டு அஞ்சியவனாக உள்ளான். எனவே மக்கள் உன்னை வணங்கி உனது அடிமை ஆவதற்கு முன்னரே அவர்களை நோய்கள் முதலானவற்றால் வருத்தி, உன்னிடம் வர விடாமல் மக்களைத் தடுக்கிறான். ஆகவே நீ அவனைத் தண்டிப்பாயாக!