Sriman Narayaneeyam - Dasaka 92 - கர்மங்களும் பக்தியும் (ச்லோகம் 949)

Dasaka 92 - கர்மங்களும் பக்தியும்

பக்தாஸ்தாவத் கலௌ ஸ்யுர்த்ரமில புவி ததோ பூரிசஸ்தத்ர சோச்சை: காவேரீம் தாம்ரபர்ணீமநு கில க்ருதமாலாம் ச புண்யாம் ப்ரதீசீம் ஹா மாமப்யேததந்தர்பவமபி ச விபோ கிஞ்சிதஞ்சத் ரஸம் த்வயி ஆசா பாசைர்நிபத்ய ப்ரமய ந பகவந் பூரய த்வந்நிஷேவாம் பக்தா: தாவத் கலௌ ஸ்யு: த்ரமில புவி தத: பூரிச: தத்ர ச உச்சை: காவேரீம் தாம்ரபர்ணீம் அநு கில க்ருதமாலாம் ச புண்யாம் ப்ரதீசீம் ஹா மாம் அபி ஏதத் அந்தர்பவம் அபி ச விபோ கிஞ்சித் அஞ்சத் ரஸம் த்வயி ஆசா பாசை: நிபத்ய ப்ரமய ந பகவந் பூரய த்வந் நிஷேவாம் भक्तास्तावत्कलौ स्युर्द्रमिळभुवि ततो भूरिशस्तत्र चोच्चैः कावेरीं ताम्रपर्णीमनुकिल धृतमालाञ्च पुण्यां प्रतीचीम् । हा मामप्येतदन्तर्भवमपि च विभो किञ्चिदञ्चिद्रसं त्वय्याशापाशैर्निबध्य भ्रमय न भगवन् पूरय त्वन्निषेवाम्

பகவானே! குருவாயூரப்பா! இந்தக் கலியுகத்தில் உனது பக்தர்கள் மிகவும் அதிகமாகவே உள்ளனர். திராவிட நாட்டில் அதிகமாக உள்ளனர். மேலும் குறிப்பாக காவிரி, தாமிரபரணி ஆகிய நதிகளின் கரைகளிலும், மேற்குத் திசையில் பாயும் நதிகளின் கரைகளிலும் பக்தர்கள் அதிகமாக உள்ளனர். இப்படிப்பட்ட இடத்தில் நான் பிறந்துள்ளேன். உன்னிடம் சிறிதளவாவது பக்தி உடையவனாக என்னை நீ மாற்ற வேண்டும். என்னை ஆசை மற்றும் பாசங்கள் என்னும் கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டிவிடாதே! எனக்கு உன்னிடம் உள்ள பக்தி என்றும் நிறைவாக இருக்கவேண்டும்.