Sriman Narayaneeyam - Dasaka 92 - கர்மங்களும் பக்தியும் (ச்லோகம் 948)
Dasaka 92 - கர்மங்களும் பக்தியும்
ஸோSயம் காலேய கால: ஜயதி முரரிபோ யத்ர ஸங்கீர்த்தநாத்யை: நிர்யத்நைரேவ மார்கைரகிலத ந சிராத் த்வத் ப்ரஸாதம் பஜந்தே ஜாதாஸ்த்ரேதா க்ருதாதாவபி ஹி கில கலௌ ஸம்பவம் காமயந்தே தைவாத் தத்ரைவ ஜாதாந் விஷய விஷரஸை: மா விபோ வஞ்சயாஸ்மாந் ஸ: அயம் காலேய கால: ஜயதி முரரிபோ யத்ர ஸங்கீர்த்தந ஆத்யை: நிர்யத்நை: ஏவ மார்கை: அகிலத ந சிராத் த்வத் ப்ரஸாதம் பஜந்தே ஜாதா: த்ரேதா க்ருத ஆதௌ அபி ஹி கில கலௌ ஸம்பவம் காமயந்தே தைவாத் தத்ர ஏவ ஜாதாந் விஷய விஷ ரஸை: மா விபோ வஞ்சய அஸ்மாந் सोऽयं कालेयकालो जयति मुररिपो यत्र सङ्कीर्तनाद्यै - र्निर्यत्नैरेव मार्गैरखिलद न चिरात् त्वत्प्रसादं भजन्ते । जातास्त्रेताकृतादावपि हि किल कलौ सम्भवं कामयन्ते दैवात्तत्रैव जातान् विषयविषरसैर्मा विभो वञ्चयास्मान्
குருவாயூரப்பா! முரன் என்ற அசுரனை அழித்த ப்ரபுவே! இப்படியாக (உனது நாம ஸங்கீர்த்தனத்தால்) கலியுகம் மிகவும் மேன்மையுடன் உள்ளது. மிகவும் எளிய முறையில், உனது நாம ஸங்கீர்த்தனத்தை மட்டுமே செய்து, மக்கள் உனது அருளை எளிதாகப் பெற இயல்கிறது. எனவே க்ருதயுகத்திலும் த்ரேதாயுகத்திலும் பிறந்த மனிதர்கள் மீண்டும் கலியுகத்தில் பிறக்க நினைக்கின்றனர் அல்லவா? நாங்கள் செய்த புண்ணியத்தினால் கலியுகத்தில் பிறந்துள்ளோம். எங்களைச் சிற்றின்பம் என்னும் அமிர்த வடிவில் உள்ள விஷத்தில் ஆழ்த்திவிடாதே!