Sriman Narayaneeyam - Dasaka 92 - கர்மங்களும் பக்தியும் (ச்லோகம் 947)

Dasaka 92 - கர்மங்களும் பக்தியும்

ச்வேதச்சாயம் க்ருதே த்வாம் முநிவர வபுஷம் ப்ரீணயந்தே தபோபி: த்ரேதாயாம் ஸ்ருக் ஸ்ருவாத்யங்கிதம் அருணதநும் யஜ்ஞரூபம் யஜந்தே ஸேவந்தே தந்த்ரமார்கைர் விலஸத் அரிகதம் த்வாபரே ச்யாமளாங்கம் நீலம் ஸங்கீர்த்தநாத்யைரிஹ கலி ஸமயே மாநுஷாஸ்த்வாம் பஜந்தே ச்வேதச்சாயம் க்ருதே த்வாம் முநி வர வபுஷம் ப்ரீணயந்தே தபோபி: த்ரேதாயாம் ஸ்ருக் ஸ்ருவ ஆதி அங்கிதம் அருண தநும் யஜ்ஞரூபம் யஜந்தே ஸேவந்தே தந்த்ர மார்கை: விலஸத் அரி கதம் த்வாபரே ச்யாமள அங்கம் நீலம் ஸங்கீர்த்தந ஆத்யை: இஹ கலி ஸமயே மாநுஷா: த்வாம் பஜந்தே श्वेतच्छायं कृते त्वां मुनिवरवपुषं प्रीणयन्ते तपोभि - स्त्रेतायां स्रुक्स्रुवाद्यङ्कितमरुणतनुं यज्ञरूपं यजन्ते । सेवन्ते तन्त्रमार्गैर्विलसदरिगदं द्वापरे श्यामलाङ्गं नीलं सङ्कीर्तनाद्यैरिह कलिसमये मानुषास्त्वां भजन्ते

குருவாயூரப்பா! க்ருதயுகத்தில் உன்னை, வெண்மை நிறம் உடைய ப்ரம்மச்சாரி வடிவில் துதிக்கின்றனர். த்ரேதா யுகத்தில், ஸ்ருக் ஸ்ருவம் என்னும் யாகப் பொருட்களைத் தரித்து சிவப்பு நிறமாக உள்ள யஜ்ஞ புருஷனாக வழிபடுகின்றனர். துவாபரயுகத்தில் சக்கரத்தையும் கதாயுதத்தையும் ஏந்திய ச்யாமள நிறத்தவனாக உன்னைத் தந்திரங்கள் மூலம் வணங்குகின்றனர். கலியுகத்தில் நீல நிறமாக உன்னை உனது திருநாமங்களைக் கூறியபடி பஜனை மூலம் துதிக்கின்றனர்.