Sriman Narayaneeyam - Dasaka 92 - கர்மங்களும் பக்தியும் (ச்லோகம் 946)
Dasaka 92 - கர்மங்களும் பக்தியும்
பாபோSயம் க்ருஷ்ண ராமேத்யபிலபதி நிஜம் கூஹிதும் துச்சரித்ரம் நிர்லஜ்ஜஸ்யாஸ்ய வாசா பஹுதர கதநீயாநி மே விக்நிதாநி ப்ராதா மே வந்த்யசீலோ பஜதி கில ஸதா விஷ்ணுமித்தம் புதாம்ஸ்தே நிந்தந்த்யுச்சைர்ஹஸந்தி த்வயி நிஹித மதீம்ஸ்தாத்ருசம் மா க்ருதா மாம் பாப: அயம் க்ருஷ்ண ராம இதி அபிலபதி நிஜம் கூஹிதும் துச்சரித்ரம் நிர்லஜ்ஜஸ்ய அஸ்ய வாசா பஹுதர கதநீயாநி மே விக்நிதாநி ப்ராதா மே வந்த்யசீல: பஜதி கில ஸதா விஷ்ணும் இத்தம் புதாந் தே நிந்தந்தி உச்சை: ஹஸந்தி த்வயி நிஹித மதீந் தாத்ருசம் மா க்ருதா மாம் पपोऽयं कृष्णरामेत्यभिलपति निजं गूहितुं दुश्चारित्रं निर्लज्जस्यास्य वाचा बहुतरकथनीयानि मे विघ्नितानि । भ्राता मे वन्ध्यशीलो भजति किल सदा विष्णुमित्थं बुधांस्ते निन्दन्त्युच्चैर्हसन्ति त्वयि निहितरतींस्तादृशं मा कृथा माम्
குருவாயூரப்பா! உனது உண்மையான பக்தர்களைக் கண்ட சில மனிதர்கள், “இவன் தனது கெட்ட நடத்தையை மறைக்க இவ்விதம் க்ருஷ்ணா, இராமா என்று பஜனை செய்கிறான்”, என்று கூறுகின்றனர். அவர்கள் மேலும், “வெட்கம் இல்லாத இவர்கள் இவ்விதம் கூறுவதால் எனது முயற்சிகள் தடைபடுகின்றன. வீணாகப் பொழுதுபோக்கும் எனது சகோதரன், விஷ்ணுவை வணங்குவதாகக் கூறி வருகிறான்”, என்று உரைத்து, பரிகாசமும் செய்கின்றனர். இப்படிப்பட்டவர்களுள் என்னை நீ சேர்த்துவிடாதே!