Sriman Narayaneeyam - Dasaka 92 - கர்மங்களும் பக்தியும் (ச்லோகம் 945)
Dasaka 92 - கர்மங்களும் பக்தியும்
ஸ்த்ரீ சூத்ராஸ்த்வத் கதாதி ச்ரவண விரஹிதா ஆஸதாம் தே தயார்ஹா: த்வத் பாதாஸந்ந யாதாந் த்விஜகுல ஜநுஷோ ஹந்த சோசாம்யசாந்தாந் வ்ருத்யர்த்தம் தே யஜந்தோ பஹு கதிதம் அபி த்வாமநாகர்ணயந்தோ த்ருப்தா வித்யாபிஜாத்யை: கிமு ந விதத்தே தாத்ருசம் மா க்ருதா மாம் ஸ்த்ரீ சூத்ரா: த்வத் கதா ஆதி ச்ரவண விரஹிதா ஆஸதாம் தே தயார்ஹா: த்வத் பாத ஆஸந்ந யாதாந் த்விஜகுல ஜநுஷ: ஹந்த சோசாமி அசாந்தாந் வ்ருத்யர்த்தம் தே யஜந்த: பஹு கதிதம் அபி த்வாம் அநாகர்ணயந்த: த்ருப்தா வித்யா அபிஜாத்யை: கிமு ந விதத்தே தாத்ருசம் மா க்ருதா மாம் स्त्रीशूद्रास्त्वत्कथादिश्रवणविरहिता आसतां ते दयार्हा - स्त्वत्पादासन्नयातान् द्विजकुलजनुषो हन्त शोचाम्यशान्तान् । वृत्त्यर्थं ते यजन्तो बहुकथितमपि त्वामनाकर्णयन्तो दृप्ता विद्याभिजात्यैः किमु न विदधते तादृशः मा कृथा माम्
குருவாயூரப்பா! பெண்கள், சூத்திரர்கள் ஆகியோரில் சிலர் அவர்கள் அறியாமையாலும் வினைப்பயனாலும் உனது கதை மற்றும் பெயர் முதலியவற்றின் மீது ப்ரியம் இல்லாமல் உள்ளனர். எனவே உனது கருணைக்கு அவர்கள் எப்போதும் உரியவர்கள் ஆவர்; நான் அவர்களைக் குறித்துக் கூறப்போவதில்லை. ஆனால் உனது திருவடிகளை உணர்ந்து விளங்கும் அந்தணர்கள், அரசர்கள், வைசியர்கள் ஆகியோர் மன அமைதி இன்றி உள்ளனரே! அவர்களைக் குறித்து நான் வருத்தம் அடைகிறேன். தங்கள் பிழைப்பிற்காக அவர்கள் யாகம் செய்கின்றனர். உனது பெருமைகளைக் குறித்துப் பலர் கூறியும் அவர்கள் கேட்பதில்லை. இவர்கள் தங்கள் படிப்பால் கர்வம் கொண்டவர்கள் ஆவர். அவர்கள் எதைத்தான் செய்யத் துணிவதில்லை? நீ என்னை அவர்களில் ஒருவனாக மாற்றிவிடாதே!