Sriman Narayaneeyam - Dasaka 92 - கர்மங்களும் பக்தியும் (ச்லோகம் 944)

Dasaka 92 - கர்மங்களும் பக்தியும்

யஸ்த்வந்ய: கர்மயோகஸ்தவ பஜநமய: தத்ர சாபீஷ்ட மூர்த்திம் ஹ்ருத்யாம் ஸத்வைக ரூபாம் த்ருஷதி ஹ்ருதி ம்ருதி க்வாபி வா பாவயித்வா புஷ்பைர் கந்தைர் நிவேத்யைரபி ச விரசிதை: சக்திதோ பக்திபூதை: நித்யம் வர்யாம் ஸபர்யாம் விதததயி விபோ த்வத் ப்ரஸாதம் பஜேயம் ய: து அந்ய: கர்மயோக: தவ பஜநமய: தத்ர ச அபீஷ்ட மூர்த்திம் ஹ்ருத்யாம் ஸத்வ ஏக ரூபாம் த்ருஷதி ஹ்ருதி ம்ருதி க்வ அபி வா பாவயித்வா புஷ்பை: கந்தை: நிவேத்யை: அபி ச விரசிதை: சக்தித: பக்திபூதை: நித்யம் வர்யாம் ஸபர்யாம் விததத் அயி விபோ த்வத் ப்ரஸாதம் பஜேயம் यस्त्वन्यः कर्मयोगस्तव भजनमयस्तत्र चाभीष्टमूर्तिं हृद्यां सत्त्वैकरूपां दृषदि हृदि मृदि क्वापि वा भावयित्वा । पुष्पैर्गन्धैर्निवेद्यैरपि च विरचितैः शक्तितो भक्तिपूतै - र्नित्यं वर्यां सपर्यां विदधदयि विभो त्वत्प्रसादं भजेयम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை உபாஸிப்பதற்காகச் செய்யப்படும் பூஜை என்பது ஒருவகையான கர்மயோகமே ஆகும். அப்படிப் பூஜிக்க அழகாகவும், தூய்மையானதாகவும் ஒரு மூர்த்தியை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த மூர்த்தியானது கல், மண் ஆகியவற்றால் அமைந்தும் அல்லது மனதிலேயே அமைந்தும் இருக்கலாம். அந்த மூர்த்தியை த்யானிக்க வேண்டும். பின்னர் தனது சக்திக்கு உட்பட்டு ஈட்டப்பட்ட செல்வம் மூலமாகவும், பக்தியினால் தூய்மை செய்யப்பட்டதாகவும் உள்ள மலர்கள், சந்தனம் ஆகியவற்றால் அன்றாடம் சிறந்த பூஜையைச் செய்யவேண்டும். இப்படியாக உனது அருளை நான் பெறுவேன்.