Sriman Narayaneeyam - Dasaka 92 - கர்மங்களும் பக்தியும் (ச்லோகம் 943)
Dasaka 92 - கர்மங்களும் பக்தியும்
வேதைஸ்ஸர்வாணி கர்மாண்யபல பரதயா வர்ணிதாநீதி புத்வா தாநி த்வய்யர்ப்பிதாந்யேவ ஹி ஸமநுசரந் யாநி நைஷ்கர்ம்யமீச மா பூத்வேதைர் நிஷித்தே குஹசிதபி மந: கர்மவாசாம் ப்ரவ்ருத்தி: துர்வர்ஜம் சேதவாப்தம் ததபி கலு பவத்யர்ப்பயே சித் ப்ரகாசே வேதை: ஸர்வாணி கர்மாணி அபல பரதயா வர்ணிதாநி இதி புத்வா தாநி த்வயி ஆர்ப்பிதாநி ஏவ ஹி ஸமநுசரந் யாநி நைஷ்கர்ம்யம் ஈச மா பூத் வேதை: நிஷித்தே குஹசித் அபி மந: கர்ம வாசாம் ப்ரவ்ருத்தி: துர்வர்ஜம் சேத் அவாப்தம் தத் அபி கலு பவதி அர்ப்பயே சித் ப்ரகாசே वैदैस्सर्वाणि कर्माण्यफलपरतया वर्णितानीति बुध्वा तानि त्वय्यर्पितान्येव हि समनुचरन् यानि नैष्कर्म्यमीश । मा भूद्वेदैर्निषिद्धे कुहचिदपि मनःकर्मवाचाः प्रवृत्ति - र्दुर्वज्जं चेदवाप्तं तदपि खलु भवत्यर्पये चित्प्रकाशे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! “வேதங்களில் கூறப்பட்ட கர்மங்கள் அனைத்துமே அந்தக் கர்மங்களைச் செய்வதன் மூலம் உண்டாகும் பயன்களின் மீது விருப்பம் இல்லாமல் செய்யப்படவேண்டும்”, என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனை உணர்ந்து, அந்தக் கர்மங்களை உன்னிடம் ஒப்படைத்தவனாக, அதன் பலனை எதிர்பாராமல், அவை மூலம் உண்டாகும் ஞானத்தை மட்டும் நான் அடைவேனாக. வேதங்கள் “செய்யக்கூடாதவை” என்று தடுத்துள்ள கர்மங்களைச் செய்ய எனது மனம், வாக்கு மற்றும் சரீரம் ஆகியவை உடன்படாது. அதனையும் மீறி அவை அக்கர்மங்களைச் செய்யும் என்றால், அந்தக் கர்மங்களையும், உன்னிடம், உனது ஒளி வீசும் ஞான ஸ்வரூபத்திடம் அர்ப்பணம் செய்து விடுவேன்.