Sriman Narayaneeyam - Dasaka 91 - பக்தியின் மேன்மை (ச்லோகம் 942)

Dasaka 91 - பக்தியின் மேன்மை

து:காந்யாலோக்ய ஜந்துஷ்வலமுதித விவேகோSஹமாசார்ய வர்யாத் லப்த்வா த்வத்ரூப தத்வம் குண சரித கதாத்யுத்பவத் பக்தி பூமா மாயாமேநாம் தரித்வா பரம ஸுகமயே த்வத்பதே மோதிதாஹே தஸ்யாயம் பூர்வரங்க: பவந புர பதே நாசயாசேஷ ரோகாந் து:காநி: ஆலோக்ய ஜந்துஷு அலம் உதித விவேக: அஹம் ஆசார்யவர்யாத் லப்த்வா த்வத் ரூப தத்வம் குண சரித கதா ஆதி உத்பவத் பக்தி பூமா மாயாம் ஏநாம் தரித்வா பரம ஸுகமயே த்வத்பதே மோதிதாஹே தஸ்ய அயம் பூர்வ: அங்க: பவந புர பதே நாசய அசேஷ ரோகாந் दुःखान्यालोक्य जन्तुष्वलमुदितविवेकोऽहमाचार्यवर्या - ल्लब्ध्वा त्वद्रूपतत्त्वं गुणचरितकथाद्युद्भवत्भक्तिभूमा । मायामेनां तरित्वा परमसुखमये त्वत्पदे मोदिताहे तस्यायं पूर्वरङ्गः पवनपुरपते नाशयाशेषरोगान्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஜீவர்களிடம் உண்டாகும் துன்பங்களைக் கண்டு எனக்கு ஞானம் ஏற்படவேண்டும். அதனால் ஒரு சிறந்த குருவை நான் அடைந்து, அவர் மூலமாக உனது உண்மையான ஸ்வரூப ஞானம் அடைவேன். உனது திருக்கல்யாண குணங்களைக் குறித்து எப்போதும் பாடிக் கொண்டு, அதன் காரணமாக எனது பக்தி பெருகி நிற்கும். மாயை என்பதை வென்று, பரமானந்தம் அளிக்கும் உனது திருவடிகளைப் பற்றி, மிகுந்த ஆநந்தம் அடையவேண்டும். மாயையை வெல்ல இதுவே சரியான தொடக்கம் ஆகும். குருவாயூரின் அதிபதியே! எனது நோய்களை நீக்க வேண்டும்.***