Sriman Narayaneeyam - Dasaka 91 - பக்தியின் மேன்மை (ச்லோகம் 941)

Dasaka 91 - பக்தியின் மேன்மை

ஆவ்ருத்ய த்வத் ஸ்வரூபம் க்ஷிதி ஜல மருதாத்யாத்மநா விக்ஷிபந்தீ ஜீவாந் பூயிஷ்ட கர்மாவலி விவச கதீந் து:க்கஜாலே க்ஷிபந்தீ த்வந்மாயா மாபிபூந்மாமயி புவநபதே கல்பதே தத் ப்ரசாந்த்யை த்வத்பாதே பக்திரேவேத்யவததயி விபோ ஸித்தயோகீ ப்ரபுத்த: ஆவ்ருத்ய த்வத் ஸ்வரூபம் க்ஷிதி ஜல மருத் ஆதி ஆத்மநா விக்ஷிபந்தீ ஜீவாந் பூயிஷ்ட கர்மாவலி விவச கதீந் து:க்க ஜாலே க்ஷிபந்தீ த்வத் மாயா மா அபிபூந் மாம் அயி புவநபதே கல்பதே தத் ப்ரசாந்த்யை த்வத் பாதே பக்தி: ஏவ இதி அவதத் அயி விபோ ஸித்த யோகீ ப்ரபுத்த: आवृत्य त्वत्स्वरूपं क्षितिजलमरुदाद्यात्मना विक्षिपन्ती जीवान् भूयिष्ठकर्मावलिविवशगतीन् दुःखजाले क्षिपन्ती । त्वन्माया माभिभून्मामयि भुवनपते कल्पते तत्प्रशान्त्यै त्वत्पादे भक्तिरेवेत्यवददयि विभो सिद्धयोगी प्रबुद्धः

குருவாயூரப்பா! உன்னால் ஏற்படுத்தப்பட்ட மாயையானது, உனது உண்மையான உருவத்தை மறைத்து, “நிலம், நீர், காற்று” என்பது போன்ற பலவாகக் காண்பிக்கிறது; கர்மவினை காரணமாக அடையப்பட்டதும், கட்டுப்படுத்த முடியாததும் ஆகிய உடலைப் பெற்ற ஜீவாத்மாவை, துன்பம் என்னும் கொடிய வலையில் சிக்க வைக்கிறது. இப்படிப்பட்ட மாயையானது, என்னை ஆளாமல் இருக்கவேண்டும். ப்ரபுத்தர் என்ற ஸித்தர், “உனது திருவடிகளில் கொள்ளும் பக்தி ஒன்றே அந்த மாயையை அழிக்கவல்லது”, என்று கூறினார் அல்லவா?