Sriman Narayaneeyam - Dasaka 91 - பக்தியின் மேன்மை (ச்லோகம் 940)

Dasaka 91 - பக்தியின் மேன்மை

பூதேஷ்வேஷு த்வதைக்ய ஸ்ம்ருதி ஸமதிகதௌ நாதிகாரோSதுநா சேத் த்வத் ப்ரேம த்வத்க மைத்ரீ ஜடமதீஷு க்ருபா த்விட்ஸு பூயாதுபேக்ஷா அர்ச்சாயாம் வா ஸமர்ச்சா குதுகமுருதர ச்ரத்தயா வர்த்ததாம் மே த்வத் ஸம்ஸேவீ ததாபி த்ருதம் உபலபதே பக்த லோகோத்தமத்வம் பூதேஷு ஏஷு த்வத் ஐக்ய ஸ்ம்ருதி ஸமதிகதௌ ந அதிகார: அதுநா சேத் த்வத் ப்ரேம த்வத்க மைத்ரீ ஜடமதீஷு க்ருபா த்விட்ஸு பூயாத் உபேக்ஷா அர்ச்சாயாம் வா ஸமர்ச்சா குதுகம் உருதர ச்ரத்தயா வர்த்ததாம் மே த்வத் ஸம்ஸேவீ ததாபி த்ருதம் உபலபதே பக்த லோக உத்தமத்வம் भूतेष्वेषु त्वदैक्यस्मृतिसमधिगतौ नाधिकारोऽधुना चेत् त्वत्प्रेम त्वत्कमैत्री जडमतिषु कृपा द्विट्सु भूयादुपेक्षा । अर्चायां वा समर्चाकुतुकमुरुतरश्रद्धया वर्धतां मे त्वत्संसेवी तथापि द्रुतमुपलभते भक्तलोकोत्तमत्वम्

குருவாயூரப்பா! இந்த உலகில் வாழும் அனைத்தும் உயிர்களிலும் நீ அந்தர்யாமியாக உள்ளாய் என்று அறியும் ஞானத்தைப் பெறுவதற்கான தகுதி எனக்கு இப்போது இல்லை என்றால், “உன்னிடம் பக்தியும், உனது அடியர்களிடம் மிகுந்த அன்பும், ஞானம் இல்லாதவர்களிடம் கருணையும், விரோதிகளைப் புறக்கணிக்கும் திறனும்” எனக்கு ஏற்படவேண்டும். அதற்கும் தகுதி இல்லை என்றால், உனது திருவுருவத்தை வழிபடும் ஆசையும், மிகுந்த பற்றும் உண்டாகவேண்டும். இப்படியாக, உன்னை வழிபடக்கூடிய ஒருவன், பக்தர்களில் மிகவும் சிறந்தவனாக உள்ளான் இல்லையா?