Sriman Narayaneeyam - Dasaka 91 - பக்தியின் மேன்மை (ச்லோகம் 939)

Dasaka 91 - பக்தியின் மேன்மை

நோ முஹ்யந் க்ஷுத்த்ருடாத்யைர் பவ ஸரணி பவைஸ்த்வந்நிலீநாசயத்வாத் சிந்தா ஸாதத்யசாலீ நிமிஷலவமபி த்வத் பதாதப்ரகம்ப: இஷ்டாநிஷ்டேஷு துஷ்டி வ்யஸந விரஹிதோ மாயிகத்வாவபோதாத் ஜ்யோத்ஸ்நாபிஸ்த்வந்நகேந்தோ: அதிக சிசிரிதேநாத்மநா ஸஞ்சரேயம் நோ முஹ்யந் க்ஷுத் த்ருடா ஆத்யை: பவ ஸரணி பவை: த்வத் நிலீந ஆசயத்வாத் சிந்தா ஸாதத்யசாலீ நிமிஷலவம் அபி த்வத் பதாத் அப்ரகம்ப: இஷ்ட அநிஷ்டேஷு துஷ்டி வ்யஸந விரஹித: மாயிகத்வ அவபோதாத் ஜ்யோத்ஸ்நாபி: த்வத் நக இந்தோ: அதிக சிசிரிதேந ஆத்மநா ஸஞ்சரேயம் नो मुह्यन् क्षुत्तृडाद्यैर्भवसरणिभवैस्त्वन्निलीनाशयत्वा - च्चिन्तासातत्यशाली निमिषलवमपि त्वत्पदादप्रकम्पः । इष्टानिष्टेषु तुष्टिव्यसनविरहितो मायिकत्वावबोधा - ज्ज्योत्स्नाभिस्त्वन्नखेन्दोरधिकशिशिरितेनात्मना सञ्चरेयम्

குருவாயூரப்பா! எனது மனதை உன்னிடம் ஒன்றும்படியாக நான் செய்துவிட்டேன். உலக வாழ்க்கையின்போது உண்டாகும் பசி, தாகம் போன்றவற்றால் நான் மயங்காதவனாகவும், எப்போதும் உன்னைக் குறித்து த்யானம் செய்பவனாகவும், உனது திருவடிகளில் இருந்து சிறிதும் விலகாமல் உள்ளவனாகவும் நான் இருக்க வேண்டும். மேலும், எனக்கு விருப்பமான பொருளால் உண்டாகும் மகிழ்வும், விருப்பம் இல்லாத பொருளால் உண்டாகும் துன்பமும் மாயையால் நிகழ்கின்றன என்பதை உணர்ந்தவனாக, மகிழ்வும் துன்பமும் அற்றவனாக இருக்கவேண்டும். உனது திருவடிகளில் சந்திரன் போன்று (குளிர்ச்சியாகவும் அழகாகவும்) உள்ள நகங்கள் வீசும் ஒளியின் மூலமாக நான் குளிர்ந்த மனதுடன் உலவவேண்டும்.