Sriman Narayaneeyam - Dasaka 91 - பக்தியின் மேன்மை (ச்லோகம் 938)
Dasaka 91 - பக்தியின் மேன்மை
பூதாந்யேதாநி பூதாத்மகமபி ஸகலம் பக்ஷி மத்ஸ்யாந் ம்ருகாதீந் மர்த்யாந் மித்ராணி சத்ரூநபி யமித மதிஸ்த்வந்மயாந்யாநமாநி த்வத் ஸேவாயாம் ஹி ஸித்யேந்மம தவ க்ருபயா பக்தி தார்ட்யம் விராக: த்வத் தத்வஸ்யாவபோதோSபி ச புவநபதே யத்நபேதம் விநைவ பூதாநி ஏதாநி பூத ஆத்மகம் அபி ஸகலம் பக்ஷி மத்ஸ்யாந் ம்ருக ஆதீந் மர்த்யாந் மித்ராணி சத்ரூந் அபி யமித மதி: த்வத் மயாநி ஆநமாநி த்வத் ஸேவாயாம் ஹி ஸித்யேத் மம தவ க்ருபயா பக்தி தார்ட்யம் விராக: த்வத் தத்வஸ்ய அவபோத: அபி ச புவநபதே யத்நபேதம் விநா ஏவ भूतान्येतानि भूतात्मकमपि सकलं पक्षिमत्स्यान् मृगादीन् मर्त्यान् मित्राणि शत्रूनपि यमितमतिस्त्वन्मयान्यानमानि । त्वत्सेवायां हि सिध्येन्मम तव कृपया भक्तिदार्ढ्यं विराग - स्त्वत्तत्त्वस्यावबोधोऽपि च भुवनपते यत्नभेदं विनैव
ஜகத்தின் நாதனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பஞ்சபூதங்களையும் (நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாசம்), அவை மூலம் உண்டான உலகங்களையும், பறவை இனங்களையும், மீன் இனங்களையும், விலங்கினங்களையும், மனிதர்களையும், நண்பர்களையும், விரோதிகளையும் உனது உருவம் என்றே தீர்மானித்து, அவை அனைத்தையும் நான் வணங்கும்படி நீ செய்யவேண்டும். உனக்குப் புரியும் தொண்டு மூலமாக உனது அருள் கிடைக்கப் பெறுகிறது. அந்த அருளால் மிகச் சிறந்த பக்தியும், பற்றில்லாத குணமும், உன்னைக் குறித்த ஞானமும் உண்டாகிறது இல்லையா?