Sriman Narayaneeyam - Dasaka 91 - பக்தியின் மேன்மை (ச்லோகம் 937)
Dasaka 91 - பக்தியின் மேன்மை
ச்ரேயோமார்க்கேஷு பக்தாவதிக பஹுமதிர் ஜந்ம கர்மாணி பூயோ காயந் க்ஷேமாணி நாமாந்யபி தத் உபயத: ப்ரத்ருதம் ப்ரத்ருதாத்மா உத்யத்ஹாஸ: கதாசித் குஹசிதபி ருதந் க்வாபி கர்ஜந் ப்ரகாயந் உந்மாதீவ ப்ரந்ருத்யந்நயி குரு கருணாம் லோக பாஹ்யச்சரேயம் ச்ரேய: மார்க்கேஷு பக்தௌ அதிக பஹுமதி: ஜந்ம கர்மாணி பூய: காயந் க்ஷேமாணி நாமாநி அபி தத் உபயத: ப்ரத்ருதம் ப்ரத்ருத ஆத்மா உத்யத் ஹாஸ: கதாசித் குஹசித் அபி ருதந் க்வ அபி கர்ஜந் ப்ரகாயந் உந்மாதீ இவ ப்ரந்ருத்யந் அபி குரு கருணாம் லோக பாஹ்யம் சரேயம் श्रेयोमार्गेषु भक्तावधिकबहुमतिर्जन्मकर्माणि भूयो गायन्क्षेमाणि नामान्यपि तदुभयतः प्रद्रुतं प्रद्रुतात्मा । उद्यद्धासः कदचित् कुहाचिदपि रुदन्क्वापि गर्जन् प्रगायन्नुन्मादीव प्रनृत्यन्नयि कुरु करुणां लोकबाह्यश्चरेयम्
குருவாயூரப்பா! மோக்ஷத்தை அளிக்கக்கூடிய வழிகளில், பக்தி மார்க்கத்தில் எனக்கு விருப்பம் அதிகமாக இருக்கவேண்டும். நன்மைகளை அள்ளி வழங்கக்கூடிய உனது அவதாரங்களையும், லீலைகளையும், திருநாமங்களையும் எப்போதும் நான் கூறிக்கொண்டு இருக்கவேண்டும். அதன் விளைவாக நான் எனது மனம் உருகி சிரித்தபடியும், உனது பெயர்களை உரக்கக் கூறியபடியும், பித்துப் பிடித்தவன் போல் ஆடிக்கொண்டும், உன்னை நினைத்து அழுதுகொண்டும் இருப்பேன். இப்படியாகப் பற்று இல்லாமல் நான் இருக்க நீயே அருள் புரிய வேண்டும்.