Sriman Narayaneeyam - Dasaka 91 - பக்தியின் மேன்மை (ச்லோகம் 936)

Dasaka 91 - பக்தியின் மேன்மை

பக்தேருத்பத்தி வ்ருத்தீ தவ சரண ஜுஷாம் ஸங்கமேநைவ பும்ஸாம் ஆஸாத்யே புண்யபாஜாம் ச்ரிய இவ ஜகதி ஸ்ரீமதாம் ஸங்கமேந தத் ஸங்கோ தேவ பூயாந்மம கலு ஸததம் தந்முகாதுந்மிஷத்பி: த்வத் மஹாத்ம்ய ப்ரகாரைர் பவதி ச ஸுத்ருடா பக்திருத்தூதபாபா பக்தே: உத்பத்தி வ்ருத்தீ தவ சரண ஜுஷாம் ஸங்கமேந ஏவ பும்ஸாம் ஆஸாத்யே புண்ய பாஜாம் ச்ரிய இவ ஜகதி ஸ்ரீமதாம் ஸங்கமேந தத் ஸங்க: தேவ பூயாத் மம கலு ஸததம் தத் முகாத் உந்மிஷத்பி: த்வத் மஹாத்ம்ய ப்ரகாரை: பவதி ச ஸுத்ருடா பக்தி: உத்தூத பாபா भक्तेरुत्पत्तिवृद्धी तव चरणजुषं सङ्गमेनैव पुंसा - मासाद्ये पुण्यभाजां श्रिय इव जगति श्रीमतां सङ्गमेन । तत्सङ्गो देव भूयान्मम खलु सततं तन्मुखादुन्मिषद्भि - स्त्वन्माहात्म्यप्रकारैर्भवति च सुदृढा भक्तिरुद्धूतपापा

குருவாயூரப்பா! உலகில் உள்ளவர்களுக்குச் செல்வம் படைத்தவர்களின் நட்பு மூலமாக மேலும் செல்வம் வளர்கிறது. இதே போன்று உனது திருவடிகளைச் சரணம் அடைந்தவர்களுக்கு, மிகுதியான பக்தி பெருகுகின்றது. க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்படிப்பட்ட அடியார்களின் தொடர்பு எனக்கு எப்போதும் உண்டாக வேண்டும். அவர்கள் தங்கள் நாக்கின் மூலமாக எப்போதும் உனது பெருமைகளைப் பற்றியே பேசுகின்றனர். இதன் மூலமாக அனைத்துப் பாபங்களையும் நீக்கவல்ல பக்தி உண்டாகும் அல்லவோ?