Sriman Narayaneeyam - Dasaka 91 - பக்தியின் மேன்மை (ச்லோகம் 935)

Dasaka 91 - பக்தியின் மேன்மை

பீதிர்நாம த்விதீயாத் பவதி நநு மந: கல்பிதம் ச த்விதீயம் தேநைக்யாப்யாஸ சீலோ ஹ்ருதயமிஹ யதாசக்தி புத்யா நிருந்த்யாம் மாயாவித்தே து தஸ்மிந் புநரபி ந ததா பாதி மாயாதிநாதம் தத் த்வாம் பக்த்யா மஹத்யா ஸததம் அநுபஜநீச பீதிம் விஜஹ்யாம் பீதி: நாம த்விதீயாத் பவதி நநு மந: கல்பிதம் ச த்விதீயம் தேந ஐக்ய அப்யாஸ சீல: ஹ்ருதயம் இஹ யதா சக்தி புத்யா நிருந்த்யாம் மாயா வித்தே து தஸ்மிந் புந: அபி ந ததா பாதி மாயா அதிநாதம் தத் த்வாம் பக்த்யா மஹத்யா ஸததம் அநுபஜந் ஈச பீதிம் விஜஹ்யாம் भीतिर्नाम द्वितीयाद्भवति ननु मनःकल्पितं च द्वितीयं तेनैक्याभ्यासशीलो हृदयमिह यथाशक्ति बुद्धया निरुन्ध्याम् । मायाविद्धे तु तस्मिन् पुनरपि न तथा भाति मायाधिनाथं तं त्वां भक्त्या महत्या सततमनुभजन्नीश भीतिं विजह्याम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மக்களுக்குப் பயம் என்பதே வேறு ஒரு பொருளால் (தன்னைவிட வேறுபட்ட இரண்டாவது ஒரு பொருள்) மட்டுமே உண்டாகிறது அல்லவா! அப்படி பயம் விளைவிக்கும் அந்தப் பொருளானது, மனதில் உண்டாகும் கற்பனையால் ஏற்பட்டதே ஆகும் (பயம் என்பது காரியப்பொருள், இரண்டாவது பொருள் என்பது காரணப்பொருள் ஆகும்). நான் எனது மனதை ஒருநிலைப்படுத்தி, காரியப்பொருளும் காரணப்பொருளும் ஒன்றே என்பதை அறிந்து கொள்வேன். ஆனால் அந்த மனமானது மாயையினால் மீண்டும் சூழப்படும்போது, தெளிவான நிலை மறைந்து, ப்ரகாசம் குறைந்துவிடும். எனவே மாயையின் தேவனாக உள்ள உனது பக்தியின் மூலமாக எனது பயத்தை நான் வேரோடு அழிப்பேன்.