Sriman Narayaneeyam - Dasaka 91 - பக்தியின் மேன்மை (ச்லோகம் 934)

Dasaka 91 - பக்தியின் மேன்மை

பூமந் காயேந வாசா முஹுரபி மநஸா த்வத் பல ப்ரேரிதாத்மா யத் யத் குர்வே ஸமஸ்தம் ததிஹ பரதரே த்வய்யஸாவர்ப்பயாமி ஜாத்யாபீஹ ச்வபாகஸ்த்வயி நிஹித மந: கர்ம வாகிந்த்ரியார்த்த ப்ராணோ விச்வம் புநீதே ந து விமுக மநா: த்வத் பதாத் விப்ரவர்ய: பூமந் காயேந வாசா முஹு: அபி மநஸா த்வத் பல ப்ரேரித ஆத்மா யத் யத் குர்வே ஸமஸ்தம் தத் இஹ பரதரே த்வயி அஸௌ அர்ப்பயாமி ஜாத்யா அபி இஹ ச்வபாக: த்வயி நிஹித மந: கர்ம வாக் இந்த்ரிய அர்த்த ப்ராண: விச்வம் புநீதே ந து விமுக மநா: த்வத் பதாத் விப்ரவர்ய: भूमन् कायेन वाचा मुहुरपि मनसा त्वद्बलप्रेरितात्मा यद्यत्कुर्वे समस्तं तदिह परतरे त्वय्यसावर्पयामि । जात्यापीह श्वपाकस्त्वयि निहितमनः कर्मवागिन्द्रियार्थप्राणो विश्वं पुनीते न तु विमुखमनास्त्वत्पदाद्विप्रवर्यः

எங்கும் நிறைந்தவனே! குருவாயூரப்பா! உனது சக்தியால் எனது மனம் செயல்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நான் எனது உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் செய்யும் அனைத்துச் செயல்களையும் உன்னிடமே அர்ப்பணம் செய்கிறேன். ஒருவன் பிறப்பால் மிகவும் தாழ்ந்த சண்டாளனாக இருந்தாலும், அவன் உன்னிடம் தன் மனம் வாக்கு, புலன்கள், ப்ராணன் முதலியவற்றை அர்ப்பணம் செய்தால், அவன் (தன்னை மட்டும் அல்லாது) உலகத்தையே பரிசுத்தம் செய்கிறான். ஆனால் உனது திருவடிகளின் மீது பக்தி இல்லாதவன் உயர்ந்த அந்தண குலத்தில் பிறந்தாலும், உலகத்தையே சுத்தமாக்க முடியாது அல்லவா?