Sriman Narayaneeyam - Dasaka 91 - பக்தியின் மேன்மை (ச்லோகம் 933)
Dasaka 91 - பக்தியின் மேன்மை
ஸ்ரீக்ருஷ்ண த்வத் பதோபாஸநமபயதமம் பத்த மித்யார்த்த த்ருஷ்டே: மர்த்யஸ்யார்த்தஸ்ய மந்யே வ்யபஸரதி பயம் யேந ஸர்வாத்மநைவ யத்தாவத் த்வத் ப்ரணீதாநிஹ பஜந விதீநாஸ்திதோ மோஹ மார்க்கே தாவந்நப்யாவ்ருதாக்ஷ: ஸ்கலதி ந குஹசித் தேவ தேவாகிலாத்மந் ஸ்ரீ க்ருஷ்ண த்வத் பத உபாஸநம் அபயதமம் பத்த மித்யா அர்த்த த்ருஷ்டே: மர்த்யஸ்ய ஆர்த்தஸ்ய மந்யே வ்யபஸரதி பயம் யேந ஸர்வ ஆத்மநா ஏவ யத் தாவத் த்வத் ப்ரணீதாந் இஹ பஜந விதீந் ஆஸ்தித: மோஹ மார்க்கே தாவந் அபி ஆவ்ருத ஆக்ஷ: ஸ்கலதி ந குஹசித் தேவ தேவ அகில ஆத்மந் श्रीकृष्ण त्वत्पदोपासनमभयतमं बद्धमिथ्यार्थदृष्टे - र्मर्त्यस्यार्तस्य मन्ये व्यपसरति भयं येन सर्वात्मनैव । यत्तावत्त्वत्प्रणीतानिह भजनविधीनास्थितो मोहमार्गे धावन्नप्यावृताक्षः स्खलति न कुहचिद्देवदेवाखिलात्मन्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தேவர்களின் தேவனே! அனைத்து உயிர்களின் ஆத்மாவாக உள்ளவனே! உலகில் உள்ள பெய்யானவற்றின் மேல் மிகுதியாக அக்கறை செலுத்தி ஆசை வைத்து, அதன் காரணமாகவே மரணம் என்னும் பயத்தை அடையும் எந்த ஒரு மனிதனுக்கும் உனது திருப்பாதங்களே கதியாகும். அவை பயத்தை நீக்கவல்லவை என்று நான் நினைக்கிறேன். நீ உபதேசித்த பக்தி மார்க்கத்தை நிச்சயம் பின்பற்ற வேண்டும். அப்படி யார் ஒருவன் பின்பற்றுகிறானோ, அவன் தவறான பாதையில் சென்றாலும் தடுக்கி விழுவதில்லை அல்லவா?