Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 932)
Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை
யத் கிஞ்சிதபி அவிதுஷாSபி விபோ மயோக்தம் தந்மந்த்ர சாஸ்த்ர வசநாத்யபித்ருஷ்டமேவ வ்யாஸோக்தி ஸாரமய பாகவதோபகீத க்லேசாந் விதூய குரு பக்திபரம் பராத்மந் யத் கிஞ்சித் அபி அவிதுஷா அபி விபோ மயா உக்தம் தத் மந்த்ர சாஸ்த்ர வசநாதி அபித்ருஷ்டம் ஏவ வ்யாஸ உக்தி ஸார மய பாகவத உபகீத க்லேசாந் விதூய குரு பக்திபரம் பராத்மந் यत् किञ्चिदप्यविदुषापि विभो मयोक्तं तन्मन्त्रशास्त्रवचनाद्यभिदृष्टमेव । व्यासोक्तिसारमयभागवतोपगीत क्लेशान् विधूय कुरु भक्तिभरं परात्मन्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! எனக்குப் போதிய அறிவும் ஞானமும் இல்லை. ஆயினும் நான் கூறிய அனைத்தும், மந்த்ரசாஸ்ரத்தில் உள்ளன. வ்யாஸ முனிவர் இயற்றிய, புராணங்களின் ஸாரமாக உள்ள ஸ்ரீமத்பாகவதம் உன்னையே துதிக்கின்றது. இத்தகைய சிறப்பும், பெருமையும், மேன்மையும் உடைய நீ எனது துயர்களை நீக்கி என்னுடைய பக்தியை மேலும் வளர்க்க வேண்டும்.***