Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 931)
Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை
பூதார்த்த கீர்த்திரநுவாத விருத்த வாதௌ த்ரேதார்த்தவாத கதய: கலு ரோசநார்த்தா: ஸ்காந்தாதிகேஷு பஹவோSத்ர விருத்தவாதா: த்வத் தாமஸத்வ பரிபூத்யுபசிக்ஷணாத்யா: பூத அர்த்த கீர்த்தி: அநுவாத விருத்த வாதௌ த்ரேதா அர்த்த வாத கதய: கலு ரோசந அர்த்தா: ஸ்காந்த ஆதிகேஷு பஹவ: அத்ர விருத்த வாதா: த்வத் தாமஸத்வ பரிபூதி உபசிக்ஷண ஆத்யா: भूतार्थकीर्तिरनुवादविरुद्धवादौ त्रेधार्थवादगतयः खलु रोचनार्थाः । स्कान्दादिकेषु बहवोऽत्र विरुद्धवादा - स्त्वत्तामसत्वपरिभूत्युपशिक्षणाद्याः
குருவாயூரப்பா! அர்த்தவாதம் என்பது மூன்று வகையாக உள்ளது. முன்பு நடந்ததைக் கூறுவது (பூத அர்த்த கீர்த்தி), ஒருமுறைக் கூறியதை மேலும் விளக்கமாகக் கூறுவது (அநுவாதம்), முரணான பொருள் கூறுவது (விருத்த வாதம்) என்பதாகும். இவை மூன்றும், கூறப்படும் விவரங்களில் உள்ள பொருளின் தன்மையை சுவாரஸ்யப்படுத்தவே உள்ளன அல்லவா? ஆகவே ஸ்காந்தம் போன்றவற்றில் உனக்குக் கூறப்பட்ட தாமஸ குணம் மற்றும் தோல்வி முதலியவை விருத்த வாதங்கள் ஆகின்றன.