Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 930)

Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை

யே ஸ்வ ப்ரக்ருத்யநுகுணா கிரிசம் பஜந்தே தேஷாம் பலம் ஹி த்ருடயைவ ததீய பக்த்யா வ்யாஸோ ஹி தேந க்ருதவாநதிகாரி ஹேதோ: ஸ்கந்தாதிகேஷு தவ ஹாநி வசோSர்த்தவாதை: யே ஸ்வ ப்ரக்ருதி அநுகுணா கிரிசம் பஜந்தே தேஷாம் பலம் ஹி த்ருடயா ஏவ ததீய பக்த்யா வ்யாஸ: ஹி தேந க்ருதவாந் அதிகாரி ஹேதோ: ஸ்கந்த ஆதிகேஷு தவ ஹாநி வச: அர்த்தவாதை: ये स्वप्रकृत्यनुगुणा गिरिशं भजन्ते तेषां फलं हि दृढयैव तदीयभक्त्या । व्यासो हि तेन कृतवानधिकारिहेतोः स्कान्दादिकेषु तव हानिवचोऽर्थवादैः

குருவாயூரப்பா! தங்கள் வினைப்பயன் காரணமாக சிவனை உபாஸிப்பவர்களுக்கு உண்டாகும் பயன் என்பது, சிவனிடம் அவர்கள் கொண்டுள்ள பக்தியால் விளைகிறது. இதனால்தான் வ்யாஸ முனிவர் ஸகந்தபுரணத்தில் சிவனை உயர்வாகவும், அர்த்தவாதமாக உன்னைத் தாழ்த்தியும் கூறினார்.