Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 929)

Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை

யத் ப்ராஹ்மகல்ப இஹ பாகவத த்விதீய ஸ்கந்தோதிதம் வபுரநாவ்ருதமீச தாத்ரே தஸ்யைவ நாம ஹரி சர்வ முகம் ஜகாத ஸ்ரீமாதவ: சிவ பரரோSபி புராண ஸாரே யத் ப்ராஹ்மகல்ப இஹ பாகவத த்விதீய ஸ்கந்த உதிதம் வபு: அநாவ்ருதம் ஈச தாத்ரே தஸ்ய ஏவ நாம ஹரி சர்வ முகம் ஜகாத ஸ்ரீமாதவ: சிவ பர: அபி புராண ஸாரே यत् ब्राह्मकल्प इह भागवतद्वितीय - स्कन्धोदितं वपुरनावृतमीश धात्रे । तस्यैव नाम हरिशर्वमुखं जगाद श्रीमाधवः शिवपरोऽपि पुराणसारे

குருவாயூரப்பா! ஈசனே! தற்போது இயங்கிக் கொண்டுள்ள, ப்ரஹ்ம கல்பம் என்ற காலக்கட்டத்தின் தொடக்கத்தில், நான்முகனுக்கு நீ உனது திருமேனியைக் காண்பித்தாய். இந்த நிகழ்ச்சியானது ஸ்ரீமத்பாகவதத்தின் இரண்டாவது ஸ்கந்தத்தில் கூறப்பட்டது. ஸ்ரீமாதவாச்சாரியார் என்பவர் சிவன் அடியாராக இருந்தபோதிலும், தான் எழுதிய புராண ஸாரம் என்ற நூலில், நீ நான்முகனுக்குக் காண்பித்த அந்தத் திருமேனியே “ஹரி, சிவன்”, என்று கூறுகிறார்.