Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 928)
Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை
ஸமஸ்த ஸாரே ச புராண ஸங்க்ரஹே விஸம்சயம் த்வந் மஹிமைவ வர்ண்யதே த்ரி மூர்த்தி யுக் ஸத்யபத த்ரிபாகத: பரம் பதம் தே கதிதம் ந சூலிந: ஸமஸ்த ஸாரே ச புராண ஸங்க்ரஹே விஸம்சயம் த்வத் மஹிமா ஏவ வர்ண்யதே த்ரி மூர்த்தி யுக் ஸத்யபத த்ரிபாகத: பரம் பதம் தே கதிதம் ந சூலிந: समस्तसारे च पुराणसंग्रहे विसंशयं त्वन्महिमैव वर्ण्यते । त्रिमूर्तियुक्सत्यपदत्रिभागतः परं पदं ते कथितं न शूलिनः
குருவாயூரப்பா! அனைத்துப் புராணங்களின் ஸாரத்தையும் கூறுகின்ற புராண ஸங்க்ரஹம் என்ற நூலில் உனது பெருமையே பேசப்பட்டுள்ளது. மூன்று மூர்த்திகள் உள்ள ஸத்யலோகத்தைக் காட்டிலும், உனது ஸ்ரீவைகுண்டமே மேலானது என்று கூறப்பட்டுள்ளது. சூலம் ஏந்திய சிவனின் லோகம் கூறப்படவில்லை.