Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 927)
Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை
மூர்த்தி த்ரயாதிகமுவாச ச மந்த்ர சாஸ்த்ரஸ்ய ஆதௌ கலாய ஸுஷமம் ஸகலேச்வரம் த்வாம் த்யாநம் ச நிஷ்கலமஸௌ ப்ரணவே கலூக்த்வா த்வாமேவ தத்ர ஸகலம் நிஜகாத நாந்யம் மூர்த்தி த்ரய அதிகம் உவாச ச மந்த்ர சாஸ்த்ரஸ்ய ஆதௌ கலாய ஸுஷமம் ஸகல ஈச்வரம் த்வாம் த்யாநம் ச நிஷ்கலம் அஸௌ ப்ரணவே கலு உக்த்வா த்வாம் ஏவ தத்ர ஸகலம் நிஜகாத ந அந்யம் मूर्तित्रयातिगमुवाच च मन्त्रशास्त्रस्यादौ कलायसुषमं सकलेश्वरं त्वाम् । ध्यानं च निष्कळमसौ प्रणवे खलूक्त्वा त्वामेव तत्र सकलं निजगाद नान्यम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! காயாம்பூ போன்ற நிறம் உடையவனும், அனைத்திற்கும் ஈச்வரனாகவும் உள்ள உன்னை, ஆதிசங்கரர் மந்திர சாஸ்திரத்தின் தொடக்கத்தில், “நான்முகன், விஷ்ணு, சிவன் ஆகியோரை விட மேலானவன்”, என்றார். மேலும் ப்ரணவ மந்திரத்தின் முழுமுதற் கடவுள் மற்றும் த்யானத்தின் ஸாதனமாக உன்னையே கூறினார். வேறு எந்த தெய்வத்தையும் அவர் கூறவில்லையே!