Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 923)

Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை

மூர்த்தித்ரயேச்வர ஸதாசிவ பஞ்சகம் யத் ப்ராஹு: பராத்ம வபுரேவ ஸதாசிவோSஸ்மிந் தத்ரேச்வரஸ்து ஸ விகுண்டபதஸ்த்வமேவ த்ரித்வம் புநர்பஜஸி ஸத்யபதே த்ரிபாகே மூர்த்தி த்ரய ஈச்வர ஸதாசிவ பஞ்சகம் யத் ப்ராஹு: பராத்ம வபு: ஏவ ஸதாசிவ: அஸ்மிந் தத்ர ஈச்வர: து ஸ விகுண்டபத: த்வம் ஏவ த்ரித்வம் புந: பஜஸி ஸத்ய பதே த்ரி பாகே मूर्तित्रयेश्वरसदाशिवपञ्चकं यत् प्राहुः परात्मवपुरेव सदाशिवोऽस्मिन् । तत्रेश्वरस्तु स विकुण्ठपदस्त्वमेव त्रित्वं पुनर्भजसि सत्यपदे त्रिभागे

குருவாயூரப்பா! இந்த உலகில் பலரும் “நான்முகன், விஷ்ணு, சிவன், ஈச்வரன், ஸதாசிவன்” என்று ஐந்து மூர்த்திகள் உள்ளதாகக் கூறுகின்றனர். ஸதாசிவம் என அனைத்திற்கும் ஆத்மாவாக நீயே உள்ளாய். ஈச்வரன் என்பதும் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் நீயே ஆவாய். மூன்று லோகங்களாக உள்ள ஸத்யலோகம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சிவலோகம் ஆகியவற்றில் விளங்கும் நான்முகன், விஷ்ணு மற்றும் சிவன் போன்றவர்கள் உனது மூன்று பாகங்களே ஆவர்.