Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 922)
Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை
வ்ருக ப்ருகுமுநி மோஹிந்யம்பரீஷாதி வ்ருத்தேஷு அயி தவ ஹி மஹத்வம் ஸர்வ சர்வாதி ஜைத்ரம் ஸ்திதமிஹ பரமாத்மந் நிஷ்கலார்வாகபிந்நம் கிமபி யதவபாதம் தத் ஹி ரூபம் தவைவ வ்ருக ப்ருகுமுநி மோஹிநீ அம்பரீஷ ஆதி வ்ருத்தேஷு அயி தவ ஹி மஹத்வம் ஸர்வ சர்வ ஆதி ஜைத்ரம் ஸ்திதம் இஹ பரமாத்மந் நிஷ்கல அர்வாக் அபிந்நம் கிம் அபி யத் அவபாதம் தத்ஹி ரூபம் தவ ஏவ वृकभृगुसुनिमोहिन्यम्बरीषादिवृत्तेष्वयि तव हि महत्त्वं सर्वशर्वादिजैत्रम् । स्थितमिह परमात्मन् निष्कलार्वागभिन्नं किमपि यदवभातं तद्धि रूपं तवैव
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பரமாத்மா! உனது பெருமை என்பது வ்ருகாசுரன், ப்ருகு முனிவர், மோஹினீ, அம்பரீஷன் ஆகியோரின் சரிதங்கள் மூலம் வெளிப்படுகிறது. உனது இந்த மேன்மையானது, சிவன் முதலானவர்களின் மேன்மையை வெல்லக்கூடியது என்று உணர முடிகிறது. தொடக்கத்தில் முழுமுதலாக, எந்தவிதமான மாறுபாடுகளும் அடையாமல், விளக்க இயலாமல் எந்த ஒன்று இருந்ததோ, அதுவே உனது ரூபமாகும்.