Sriman Narayaneeyam - Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை (ச்லோகம் 921)
Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை
ஜகத் ஸ்ருஷ்ர்யாதௌ த்வாம் நிகம நிவஹைர்வந்திபிரிவ ஸ்துதம் விஷ்ணோ ஸச்சித் பரம ரஸ நிர்த்வைத வபுஷம் பராத்மாநம் பூமந் பசுப வநிதா பாக்ய நிவஹம் பரீதாபச்ராந்த்யை பவநபுரவாஸிந் பரிபஜே ஜகத் ஸ்ருஷ்டி ஆதௌ த்வாம் நிகம நிவஹை: வந்திபி: இவ ஸ்துதம் விஷ்ணோ ஸத் சித் பரம ரஸ நிர்த்வைத வபுஷம் பராத்மாநம் பூமந் பசுப வநிதா பாக்ய நிவஹம் பரீதாப ச்ராந்த்யை பவந புர வாஸிந் பரிபஜே जगत्सृष्ट्यादौ त्वां निगमनिवहैर्वन्दिभिरिव स्तुतं विष्णो सच्चित्परमरसनिर्द्वैतवपुषम् । परात्मानं भूमन् पशुपविनताभाग्यनिवहं परीतपश्रान्त्यै पवनपुरवासिन् परिभजे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ உலகத்தை உருவாக்க ஆரம்பித்த நேரத்தில், துதி பாடும் கூட்டம் போன்று நின்று உன்னை உபநிஷத்துக்கள் துதித்தன. நீ “ஸத் சித் ஆனந்த” ரூபமாகவும், அத்வைத வடிவமாகவும், அனைத்திற்கும் ஆத்மாவாகவும் உள்ளாய். கோபிகைகள் அனைவரும் செய்த புண்ணியங்கள் ஒரு வடிவம் பெற்றதுபோல் உள்ளவனே! எனது துன்பங்கள் அனைத்தும் விலக உன்னை வணங்குகிறேன்.***