Sriman Narayaneeyam - Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை (ச்லோகம் 920)
Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை
நிச்சித்ய தே ச ஸுத்ருடம் த்வயி பத்தபாவா: ஸாரஸ்வதா முநிவரா ததிரே விமோக்ஷம் த்வாமேவமச்யுத புநசச்யுதி தோஷ ஹீநம் ஸத்வோச்சயைக தநுமேவ வயம் பஜாம: நிச்சித்ய தே ச ஸுத்ருடம் த்வயி பத்தபாவா: ஸாரஸ்வதா முநிவரா: ததிரே விமோக்ஷம் த்வாம் ஏவம் அச்யுத புந: அச்யுதி தோஷ ஹீநம் ஸத்வ உச்சய ஏக தநும் ஏவ வயம் பஜாம: निश्चित्य ते च सुदृढं त्वयि बद्धभावाः सारस्वता मुनिवरा दधिरे विमोक्षम् । त्वामेवमच्युत पुनश्च्युतिदोषहीनं सत्त्वोच्चयैकतनुमेव वयं भजामः
குருவாயூரப்பா! ப்ருகு முனிவர் ஸரஸ்வதி நதிக்கரையில் உள்ள முனிவர்களிடம் நடந்ததைக் கூறினார். அவர்கள் நீயே ஸத்வகுணம் உள்ளவன் என்று முடிவு செய்து, உன் மீது மிகுந்த பக்தி கொண்டு, மோக்ஷம் பெற்றனர். அடியார்களைக் கைவிடாதவனே! அச்சுதனே! ஸத்வகுணமே உருவமாக உடையவனே! உன்னையே நாங்கள் துதிக்கின்றோம்.