Sriman Narayaneeyam - Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை (ச்லோகம் 919)

Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை

ஸுப்தம் ரமாங்கபுவி பங்கஜ லோசநம் த்வாம் விப்ரே விநிக்நதி பதேந முகோத்திதஸ்த்வம் ஸர்வம் க்ஷமஸ்வ முநிவர்ய பவேத் ஸதா மே த்வத் பாத சிந்ஹமிஹ பூஷணாமித்யவாதீ: ஸுப்தம் ரமா அங்க புவி பங்கஜ லோசநம் த்வாம் விப்ரே விநிக்நதி பதேந முகா உத்தித: த்வம் ஸர்வம் க்ஷமஸ்வ முநிவர்ய பவேத் ஸதா மே த்வத் பாத சிந்ஹம் இஹ பூஷணம் இதி அவாதீ: सुप्तं रमाङ्कभुवि पङ्कजलोचनं त्वां विप्रे विनिघ्नति पदेन मुदोत्थितस्त्वम् । सर्वं क्षमस्व मुनिवर्य भवेत् सदा मे त्वत्पादचिह्नमिह भूषणमित्यवादीः

குருவாயூரப்பா! தாமரை போன்ற அழகிய கண்கள் கொண்ட நீ, மஹாலக்ஷ்மியின் மடியில் தலை வைத்து சயனித்திருந்தாய், இதனைக் கண்ட ப்ருகு முனிவர் தனது காலால் உனது மார்பில் உதைத்தார். உடனே நீ எழுந்து அவரை மகிழ்வுடன் வரவேற்று, “ப்ருகு முனிவரே! எனது குற்றத்தை மன்னிக்க வேண்டும். உங்கள் காலின் சுவடானது இனி எப்போதும் என் மார்பில் விளங்கும்”, என்றாய்.