Sriman Narayaneeyam - Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை (ச்லோகம் 918)

Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை

ப்ருகும் கில ஸரஸ்வதீ நிகட வாஸிநஸ்தாபஸா: த்ரிமூர்த்திஷு ஸமாதிசந்நதிக ஸத்வதாம் வேதிதும் அயம் புநரநாதராதுதித ருத்த ரோஷே விதௌ ஹரேSபி ச ஜிஹிம்ஸிஷௌ கிரிஜயா த்ருதே த்வாமகாத் ப்ருகும் கில ஸரஸ்வதீ நிகட வாஸிந: தாபஸா: த்ரி மூர்த்திஷு ஸமாதிசந் அதிக ஸத்வதாம் வேதிதும் அயம் புந: அநாதராத் உதித ருத்த ரோஷே விதௌ ஹரே அபி ச ஜிஹிம்ஸிஷௌ கிரிஜயா த்ருதே த்வாம் அகாத் भृगुं किल सरस्वतीनिकटवासिनस्तापसा - स्त्रिमुर्तिषु समादिशन्नधिकसत्त्वतां वेदितुम् । अयं पुनरनादरादुदितरुद्धरोषे विधौ हरेऽपि च जिहिंसिषौ गिरिजया धृते त्वामगात्

குருவாயூரப்பா! ஒருமுறை ஸரஸ்வதிநதிக் கரையில் தவம் இயற்றிக் கொண்டிருந்த முனிவர்கள், மும்மூர்த்திகளில் ஸத்வகுணம் உடையவர் யார் என்று அறிய எண்ணினர். இதற்காக ப்ருகு முனிவரை அனுப்பினர். அவர் முதலில் நான்முகனின் இருப்பிடம் சென்று வணங்காமல் நின்றார். இதனைக் கண்ட நான்முகன் கோபம் கொண்டு, பிறகு கோபம் தணிந்தான். அதன் பின்னர் அவர் சிவலோகம் சென்றார். இவரைக் கண்ட சிவன் விரைந்து வந்து கட்டித் தழுவி வரவேற்க வந்தார். உடனே ப்ருகு முனிவர், “நீ ஆசாரமாக இல்லாதவன். ஆகவே என்னைத் தொடாதே”, என்றார். உடனே உன்னைக் கொல்ல முயன்ற சிவனைப் பார்வதி தடுத்தாள். பின்னர் ப்ருகு உனது இருப்பிடம் வந்தாராமே!