Sriman Narayaneeyam - Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை (ச்லோகம் 917)
Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை
பத்ரம் தே சாகுநேய ப்ரமஸி கிமதுநா த்வம் பிசாசஸ்ய வாசா ஸந்தேஹச்சேந்மதுக்தௌ தவ கிமு ந கரோஷ்யங்குலீமங்க மௌலௌ இத்தம் த்வத் வாக்ய மூட: சிரஸி க்ருத கர: ஸோSபதச்சிந்நபாதம் ப்ரம்சோ ஹ்யேவம் பரோபாஸிதுரபி ச கதி: சூலிநோSபி த்வமேவ பத்ரம் தே சாகுநேய ப்ரமஸி கிம் அதுநா த்வம் பிசாசஸ்ய வாசா ஸந்தேஹ: சேத் மத் உக்தௌ தவ கிமு ந கரோஷி அங்குலீம் அங்க மௌலௌ இத்தம் த்வத் வாக்ய மூட: சிரஸி க்ருத கர: ஸ: அபதத் சிந்ந பாதம் ப்ரம்ச: ஹி ஏவம் பர உபாஸிது: அபி ச கதி: சூலிந: அபி த்வம் ஏவ भद्रं ते शाकुनेय भ्रमसि किमधुना त्वं पिशाचस्य वाचा सन्देहश्चेन्मदुक्तौ तव किमु न करोष्यङ्गुलीमङ्ग मौलौ । इत्थं त्वद्वाक्यमूढश्शिरसि कृतकरस्सोऽपतच्छिन्नपातं भ्रंशो ह्येवं परोपासितुरपि च गतिः शूलिनोऽपि त्वमेव
குருவாயூரப்பா! (அந்தணர் வடிவில் இருந்த) நீ அவனிடம், “சகுனியின் மகனே! நலமாக உள்ளாயா? ஒரு பிசாசு கூறியது என்று ஏன் இப்படி ஓடுகிறாய்? நான் சொல்வதில் நம்பிக்கை பிறக்கவில்லை என்றால் உனது தலை மீது கையை வைத்துப் பார்”, என்று தந்திரமாகக் கூறினாய். உனது வார்த்தையைக் கேட்ட அந்த முட்டாள் அசுரன் அப்படியே செய்தான். உடனே வேர் இற்ற மரம் போன்று கீழே விழுந்தான். மற்ற வரதேவதைகளை வழிபட்டால் இதுதான் முடிவு போலும். சூலம் ஏந்திய சிவனுக்கும் நீதானே அடைக்கலம் ஆனாய்.