Sriman Narayaneeyam - Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை (ச்லோகம் 916)

Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை

மோக்தாரம் பந்த முக்தோ ஹரிணபதி: இவ ப்ராத்ரவத்ஸோSத ருத்ரம் தைத்யாத் பீத்யா ஸ்ம தேவோ திசி திசி வலதே ப்ருஷ்டதோ தத்த த்ருஷ்டி: தூஷ்ணீகே ஸர்வலோகே தவ பதம் அதிரோக்ஷ்யந்தமுத்வீக்ஷ்ய சர்வம் தூராதேவாக்ரதஸ்த்வம் படு வடு வபுஷா தஸ்திஷே தாநவாய மோக்தாரம் பந்த முக்த: ஹரிணபதி: இவ ப்ராத்ரவத் ஸ அத ருத்ரம் தைத்யாத் பீத்யா ஸ்ம தேவ: திசி திசி வலதே ப்ருஷ்டத: தத்த த்ருஷ்டி: தூஷ்ணீகே ஸர்வ லோகே தவ பதம் அதிரோக்ஷ்யந்தம் உத்வீக்ஷ்ய சர்வம் தூராத் ஏவ அக்ரத: த்வம் படு வடு வபுஷா தஸ்திஷே தாநவாய मोक्तारं बन्धमुक्तो हरिणपतिरिव प्राद्रवत्सोऽथ रुद्रं दैत्यान् भीत्या स्म देवो दिशि दिशि वलते पृष्ठतो दत्तदृष्टिः । तूष्णीके सर्वलोके तव पदमधिरोक्ष्यन्तमुद्वीक्ष्य शर्वं दूरादेवाग्रतस्त्वं पटुवटुवपुषा तस्थिषे दानवाय

குருவாயூரப்பா! கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்கம் தனது கூண்டினைத் திறந்து விடுதலை செய்பவன் மீதே பாய்வது போன்று, தனக்கு வரம் அளித்த சிவனையே (தனது வரத்தைத் சோதித்துப் பார்க்க) துரத்திக் கொண்டு வ்ருகாசுரன் ஓடினான். சிவன் அவனுக்காகப் பயந்து பின்புறம் திரும்பிப் பார்த்துக் கொண்டு அனைத்துத் திசைகளிலும் ஓடினார். இதனைக் கண்டு உலகம் முழுதும் எதுவும் செய்ய இயலாத நிலையில் அமைதி காத்தது. இதனால், வேதங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்தை அடைய சிவன் முடிவு செய்தார். இதனை உணர்ந்த நீ ஓர் அந்தணன் போன்று வேடம் பூண்டு வ்ருகாசுரன் முன்பு நின்றாய்.