Sriman Narayaneeyam - Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை (ச்லோகம் 915)

Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை

தபஸ்தப்த்வா கோரம் ஸ கலு குபித: ஸப்தமதிநே சிர: சித்வா ஸத்ய: புரஹரமுபஸ்தாப்ய புரத: அதிக்ஷுத்ரம் ரௌத்ரம் சிரஸி கரதாநேந நிதநம் ஜகந்நாதாத் வவ்ரே பவதி விமுகாநாம் க்வ சுபதீ: தப: தப்த்வா கோரம் ஸ கலு குபித: ஸப்தம திநே சிர: சித்வா ஸத்ய: புரஹரம் உபஸ்தாப்ய புரத: அதிக்ஷுத்ரம் ரௌத்ரம் சிரஸி கர தாநேந நிதநம் ஜகந்நாதாத் வவ்ரே பவதி விமுகாநாம் க்வ சுபதீ: तपस्तप्त्वा घोरं स खलु कुपितस्सप्तमदिने शिरश्छित्त्वा सद्यः पुरहरमुपस्थाप्य पुरतः । अतिक्षुद्रं रौद्रं शिरसि करदानेन निधनं जगन्नाथाद्वव्रे भवति विमुखानां क्व शुभधीः

குருவாயூரப்பா! வ்ருகாசுரன் மிகவும் கடுமையான தவம் புரியத் தொடங்கினான். ஏழு நாட்கள் கழிந்தன. அவனுக்கு மிகவும் கோபம் வந்தது (சிவன் அதுவரை வரவில்லை என்பதால்). உடனே தனது தலையை அறுக்க முடிவு செய்தான். அப்போது சிவன் அவன் முன்பாகத் தோன்றினார். வ்ருகாசுரன் சிவனிடம், “நான் யார் தலை மீது கை வைக்கிறேனோ அவர்கள் உடனே இறந்துவிட வேண்டும்”, என்ற மிகவும் கொடுமையான வரத்தை வேண்டினானாமே! உன்னிடம் பக்தி செலுத்தாதவர்களுக்கு நல்ல அறிவு என்பது எப்படி இருக்க முடியும்?