Sriman Narayaneeyam - Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை (ச்லோகம் 914)
Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை
சகுநிஜ: ஸ து நாரதமேகதா த்வரித தோஷமப்ருச்சததீச்வரம் ஸ ச திதேச கிரீசமுபாஸிதும் ந து பவந்தமபந்துமஸாதுஷு சகுநிஜ: ஸ து நாரதம் ஏகதா த்வரித தோஷம் அப்ருச்சத் அதீச்வரம் ஸ ச திதேச கிரீசம் உபாஸிதும் ந து பவந்தம் அபந்தும் அஸாதுஷு शकुनिज: स हि नारदमेकदा त्वरिततोषमपृच्छदधीश्वरम् । स च दिदेश गिरीशमुपासितुं न तु भवन्तमबन्धुमसाधुषु
குருவாயூரப்பா! ஒருமுறை சகுனியின் மகனான வ்ருகன் என்பவன் நாரதரிடம் சென்றான். அவரிடம் விரைவாக வரம் அளிக்கக்கூடிய கடவுள் யார் என்று கேட்டான். நாரதர் அவனிடம் சிவனை உபாஸனை செய்யும்படி கூறினார். அவர், அசுரர்களுக்கும் தீய எண்ணம் படைத்தவர்களுக்கும் உறவினன் அல்லாத உன்னைச் சொல்லவில்லை.